இஸ்ரோவின் செயல்பாடுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இஸ்ரோ டிவியை அறிமுகப்படுத்த திட்டம்

சாராபாயின் நூற்றாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகும் இஸ்ரோ

இஸ்ரோ டிவி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தகவல்கள் மற்றும் உள்ளே நடக்கும் செயல்களை மக்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள இஸ்ரோ டிவி வர இருப்பதாக தகவல் அளித்துள்ளார் இஸ்ரோவின் தலைவர் சிவன்.

இளைய தலைமுறையினர் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் அறிவுப்பூர்வமான பலதகவல்களை உள்ளடக்கும் விதமாக இந்த டிவி செயல்படும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

விக்ரம் சாராபாய் நூற்றாண்டு விழா இஸ்ரோ டிவி மற்றும் இதர அறிவிப்புகள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை என அறியப்படும் விக்ரம் சாராபாய் அவர்களின் நூறாவது பிறந்தநாள் விழா அடுத்த வருடம் வர இருப்பதை தொடர்ந்து மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது இஸ்ரோ நிறுவனம்.

ஆகஸ்ட் 12ம் தேதி விக்ரமின் 99வது பிறந்தநாளைக் கொண்டாடிய விஞ்ஞானிகள், வரும் வருடத்தின் நிகழ்வுகள் அனைத்தையும் விக்ரமிற்கு சமர்பிக்கும் படி அமையுமாறு பார்த்து வருகிறார்கள்.

அவரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் படித்த கல்வி நிறுவனங்களில் சிறப்பாய் செயல்படும் மாணவர்களுக்கு பட்டம் மற்றும் விருதுகள் வழங்கி சிறப்பிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிய வருகிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில், செயற்கோள் ஏவுவதை நேரடியாக மக்கள் பார்ப்பதற்கான வசதிகள் செய்து தரப்படும் என்றும் சிவன் குறிப்பிட்டார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close