பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) இந்தியாவின் மிகப்பெரிய வணிக வங்கியாகும். நாடு முழுவதும் 24,000-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு விரிவான சேவைகளை வழங்குகிறது. அந்த வகையில் இப்போது பெரும்பாலான வங்கி சேவைகள் பணப் பரிவர்த்தனை, புதிய கணக்கு தொடங்குவது மற்றும் இதர சேவைகளை வரை அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் எளிதாக செய்யலாம்.
அந்த வகையில் உங்கள் அக்கவுண்ட்-ஐ வேறு ஒரு கிளைக்கு ( Branch Transfer) மாற்றுவதையும் எளிதாக ஆன்லைனிலேயே செய்யலாம். வேலை காரணமாக, கல்வி வசதிக்கு என பல்வேறு காரணங்களுக்காக உங்கள் அக்கவுண்ட்-ஐ நீங்கள் வசதிக்கும் இடங்களுக்கு மாற்ற வேண்டி இருக்கும். முன்பு இதற்கு எந்த வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டதோ அங்கு நேரடியாக சென்று விண்ணப்பம் பூர்த்தி செய்து மாற்ற வேண்டி இருந்தது. இப்போது ஆன்லைனிலேயே இதை செய்யலாம். ஸ்டெப் பை ஸ்டெப் ப்ராசஸ் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது எஸ்.பி.ஐ வங்கி கிளை மாற்றுவதற்கான வழிகளாகும்.
10 ஸ்டெப்ஸ்
- முதலில் எஸ்.பி.ஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கம் www.onlinesbi.com. செல்ல வேண்டும்.
2. இப்போது உங்கள் நெட்பேங்கிங் அக்கவுண்டை லாக்கின் செய்யவும். முதல் முறை பயனராக இருந்தால் நெட்பேங்கிங் அக்கவுண்ட் புதிதாக கிரியேட் செய்ய வேண்டும்.
3. லாக்கின் செய்தப் பின் 'e-services' டேப்க்கு செல்லவும்.
4. Quick links பக்கத்தில் உள்ள 'Transfer of Saving Account' என்பதை கிளிக் செய்யவும்.
5. இப்போது எந்த அக்கவுண்டை மாற்ற வேண்டுமே அதை கிளிக் செய்யவும். ஒரு அக்கவுண்ட் மட்டும் இருந்தால் அது
default-ஆக செலக்ட் செய்யப்படும்.
6. இப்போது எந்த கிளைக்கு மாற்ற வேண்டுமோ அந்த கிளையின் கோட் (Branch code) என்டர் செய்யவும்.
7. இல்லை என்றால் 'get branch code' என்பதை கொடுத்து உங்கள் கிளையை தேடி அதை செலக்ட் செய்யவும்.
8. புதிய கிளையின் பெயரை என்டர் செய்து terms and conditions ஓ.கே செய்து submit கொடுக்கவும்.
9. இப்போது பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிற்கு ஓ.டி.பி அனுப்பபடும். அதை என்டர் செய்யவும். இப்போது உங்கள் விண்ணப்பம் சமர்பிக்கப்படும்.
10. ஓரிரு நாட்களில் உங்கள் வங்கி கிளை மாற்றப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“