ஒரு முறை சார்ஜ் செய்தால், 4 நாட்களுக்கு தாக்குபிடிக்கும்... “ஷார்ப் x1 ஆன்ட்ராய்டு ஒன்” ஸ்மார்ட்போன்!

ஷார்ப் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்: 3 மணி நேரம் சார்ஜ் செய்தால், அடுத்த 4 நாளுக்கு சார்ஜ் போட தேவையில்லை

ஷார்ப் நிறுவனம் தனது 2 வது ஷார்ப் x1 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த ஷார்ப் நிறுவனம் தான் இந்த புதிய ஷார்ப் x1 ஸ்மார்ட்ஃபோனை வெளியிட்டுள்ளது. மற்ற ஃபோன்களுடன் ஒப்பிடும் போது ஷார்ப் x1 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட் போனின் விலை சற்று அதிகமாகவே உள்ளது. இதன் அன்லாக்டு வெர்சன் 40,500 ரூபாய் ஆகும்.

இந்த ஸ்மார்ட்போனுக்கு 18 மாத அப்டேட்டுகள் வழங்கப்படும் என கூகிள் நிறுவனம் உறுதியளித்துள்ளது. அதன்படி இந்த இந்த காலகாட்டத்தினுள் கூகிள் வெளியிடும் அப்டேட்டுகளை ஷார்ப் x1 ஆன்ட்ராய்டு ஸ்மார்போனில் எளிதில் பெற முடியும். இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சம் என்னவென்றால், சார்ஜை தேக்கி வைக்கும் திறன் தான். சுமார் 3 மணி நேரம் சார்ஜ் செய்தால், அடுத்த 4 நாளுக்கு சார்ஜ் போட தேவையில்லையாம்.

சிறப்பம்சங்கள்:

  • 5.3 இன்ச் ஃபுல் எச்டி IGZO LCD டிஸ்பிளே ரெசொலூசன்
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 Soc
    3 ஜிபி ரேம்
  • 32 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ்,
  • கேமரா பேட்டரி மற்றும் சாஃப்ட்வேர்
  • எல்.இ.டி ஃபிளாஸ் லைட்டுடன் கூடிய 16.4 எம்.பி ரியர் கேமரா,
  • மேலும், 8 எம்.பி செல்ஃபி கேமரா வழங்கங்கப்பட்டுள்ளது.
  • ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்கு தளத்தில் இயங்குகிறது.

பேட்டரி திறன் தான் இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் குறிப்பிடும்படியான அம்சமாக கருதப்படுகிறது. ஏனெனில், பெரும்பாலும் சாதாரண ஸ்மார்ட்போனை எடுத்துக்கொண்டால் ஒருநாள் முழுவதும் சார் இருப்பதே சவாலாக இருக்கிறது. ஆனால், இந்த ஷார்ப் x1 ஆன்ட்ராய்டு ஒன்  ஸ்மார்ட்போனில் ஒரு முறை சாரஜ் செய்தால், 4 நாட்களுக்கு சார்ஜ் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

3900எம்.ஏ.எச் திறன் கொண்ட பேட்டரி இந்த ஸ்மார்போனில் பொருத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்மார்ட்போனை முழுவதுமாக சார்ச் செய்வதற்கு சுமார் 3 மணி நேரம் ஆகுமாம்.

குறிப்பிடும் படியான மற்ற சில அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் என்பதால், தூசு மற்றும் தண்ணீர் போன்றவற்றினால் ஏற்படும் பாதிப்பு குறைவு. முன்பகுதியில் ஃபின்கர்ப்ரிண்ட் ஸ்கேனர் உள்ளது.

ஷார்ப் x1 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனானது, மின்ட் க்ரீன், டார்க் பர்பிள் மற்றும் வொயிட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close