ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்க்கையில் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. ஸ்மார்ட்போன் இருந்தால் போதும் அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே செய்து முடித்துவிடலாம். ஷாப்பிங், மளிகை பொருட்கள் வாங்குவது, கட்டணம் செலுத்துவது என அனைத்தையும் செய்யலாம். ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் மக்களின் தேவைக்கு ஏற்ப புது புது வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.
முன்பு போன் சார்ஜ் ஆக 3 முதல் 4 மணி நேரமாவது ஆகும். ஆனால் இப்போது ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் விரைவில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடிகிறது. பல வசதிகளை ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளனர். பவர் பேங்க் வசதிகள் இருந்தாலும், சில சமயம் சார்ஜ் செய்யும் போது சில தவறும், கவனக் குறைவாகவும் இருக்கிறோம். வேறு நிறுவனத்தின் சார்ஜர் பயன்படுத்துவது சார்ஜிங் வேகத்தை குறைக்கும். சில ஸ்மார்ட் டிரிக்ஸ் பயன்படுத்தி போன் வேகமாக சார்ஜ் செய்தும் வழிகளை இங்கு பார்க்கலாம்.
USB போர்ட் சார்ஜிங் தவிர்க்கவும்
போன் சார்ஜ் செய்வதற்கு கணினி அல்லது USB போர்ட்டைப் பயன்படுத்தினால், வேகமாக சார்ஜ் ஆகாது. அதாவது கணினியில் USB போர்ட் பயன்படுத்தி உங்கள் போனுக்கு கனெக்ட் செய்து சார்ஜ் செய்தால், வேகமாக சார்ஜ் ஆகாது. நேரடியாக அடாப்டர் சார்ஜர் பயன்படுத்தி சார்ஜ் செய்ய வேண்டும். முடிந்தவரை ஒரே நிறுவனத்தின் சார்ஜரைப் பயன்படுத்த வேண்டும்.
சுவிட்ச் ஆஃப் செய்து சார்ஜ் செய்யலாம்
சார்ஜ் செய்யும் போது போனை சுவிட்ச் ஆஃப் செய்து சார்ஜிங் செய்யலாம். போன் சுவிட்ச் ஆஃப் செய்ய முடிந்தால் அதை செய்து சார்ஜ் செய்யுங்கள். இப்படி செய்யும்போது பேட்டரி எந்த செயலையும் செய்யாது. விரைவாக சார்ஜ் ஆக உதவும். ஏரோபிளேன் மோடுக்கு மாற்றியும் போன் சார்ஜ் செய்யலாம்.
போன் பயன்படுத்த வேண்டாம்
வேகமாக சார்ஜ் ஆக வேண்டிய சூழலில் போன் சார்ஜிங்கில் இருக்கும்போது பயன்படுத்துவதை தவிர்க்கவும். மற்ற செயலிகள் பயன்பாட்டில் இருக்கும் போது சார்ஜிங் வேகம் குறையும். அதனால் சார்ஜிங்கில் இருக்கும்போது பயன்படுத்துவதை தவிர்க்கலாம். அந்த நேரத்தில் மற்ற வேலைகளை நாம் செய்து முடிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“