Advertisment

இனி வாட்ஸ்அப்பில் FASTag ரீசார்ஜ் செய்யலாம்.. எப்படி தெரியுமா?

சில குறிப்பிட்ட பயனர்கள் வாட்ஸ்அப் மூலம் நேரடியாக FASTag ரீசார்ஜ் செய்யலாம். எப்படி என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

author-image
sangavi ramasamy
New Update
இனி வாட்ஸ்அப்பில்  FASTag ரீசார்ஜ் செய்யலாம்.. எப்படி தெரியுமா?

சில குறிப்பிட்ட பயனர்கள் வாட்ஸ்அப் மூலம் நேரடியாக ஃபாஸ்டேக் ரீசார்ஜ் செய்யலாம். IDFC FIRST வங்கி இந்த புது முயற்சியை நேற்று அறிமுகப்படுத்தியது. IDFC FIRST வங்கி பயனர்கள் வாட்ஸ்அப் மூலம் நேரடியாக ஃபாஸ்டேக் ரீசார்ஜ் செய்யலாம். IDFC FIRST வங்கியின் WhatsApp chatbot பக்கத்தில் இந்த வசதி கிடைக்கிறது.

Advertisment

IDFC FIRST வங்கி பயனர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும். ‘payments on WhatsApp’மூலம் பயனர்கள் ஃபாஸ்டேக் ரீசார்ஜிற்கு பணம் செலுத்தலாம். ஃபாஸ்டேக் ரீசார்ஜிற்கு என தனி ஆப்கள் டவுன்லோடு செய்யத் தேவையில்லை.

எப்படி ரீசார்ஜ் செய்வது?

IDFC FIRST வங்கியின் WhatsApp chatbot மூலம் இந்த சேவையை பயன்படுத்தலாம். அதற்கு வாடிக்கையாளர்கள், IDFC FIRST வங்கியின் அதிகாரப்பூர்வ WhatsApp chatbot எண் +919555555555 எண்ணிற்கு முதலில் மெசேஜ் அனுப்ப வேண்டும்.

பயனர்கள் முதலில் WhatsApp chatbot எண்ணை சேவ் செய்ய வேண்டும். WhatsApp chatbot பக்கத்தை ஆப்பன் செய்ய வேண்டும். ரீசார்ஜ் ஆப்ஷன் செலக்ட் செய்ய வேண்டும். ரீசார்ஜ் தொகையை குறிப்பிடவும்.

OTP மூலம் பரிவர்த்தனையை உறுதி செய்க. பின், ரீசார்ஜ் செய்ததற்கான மெசேஜ் வந்துவிடும்.

இதுகுறித்து பேசிய IDFC FIRST வங்கியின் மூத்த அதிகாரி பி. மதிவாணன், "(ஐடிஎஃப்சி) IDFC FIRST வங்கி ஃபாஸ்டேக் முறையில் சிறந்த பயனர் அனுபவங்களை உருவாக்க முயற்சித்து வருகிறது.

‘payments on WhatsApp’ மூலம் ஃபாஸ்டேக் ரீசார்ஜ் செய்யலாம். வாட்ஸ்அப் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்துவதில் மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

வாட்ஸ்அப் இந்தியாவின் தலைவர் அபிஜித் போஸ் கூறுகையில்," IDFC FIRST வங்கி வாட்ஸ்அப் மூலம்

ஃபாஸ்டேக் ரீசார்ஜ் செய்யும் நடைமுறையை கொண்டுவந்துள்ளது. இது டிஜிட்டல் பரிவர்த்தனைகளை முன்னேற்றுவற்கான வழி ஆகும். அனைவரும் எளிதாக அணுகக்கூடிய வகையில் மாற்றுவதற்கான வாட்ஸ்அப் இந்தியாவின் முயற்சிக்கு இது எடுத்துக்காட்டாகும்" என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment