புகைப்படம் என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த பொழுது போக்கு. டிஜிட்டல் கேமராக்கள் என்றால் அது பலருக்கும் கனவாகவே இருக்கும். கெனான், நிக்கான், வரிசையில் சோனியின் கேமராக்களும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பினைப் பெற்றுவிட்டன.

இந்த டிஜிட்டல் கேமரா வரிசைகளில் புது இடம் பிடித்திருப்பது தான் Sony Alpha A7 ஆகும். அதனுடைய சிறப்பம்சங்கள் மற்றும் அதன் பயன்பாடு குறித்து ஒரு சிறு பார்வை.

Sony Alpha a7 III review:

சோனி ஆல்பா a7 III ( Sony Alpha a7 III ) என்பது 35mm கொண்ட ஃபுல் பிரேம் கேமராவாகும். எடை குறைவாகவும் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லக் கூடியதாகவும் இது இருக்கிறது.

24.2 மெகா பிக்சல் எக்ஸ்மோர் R CMOS (Exmor R CMOS­­­) சென்சார் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் BIONZ X இமேஜ் பிராசசிங் எஞ்சின் மற்ற கேமராக்களை விட அதிவேகமாக புகைப்படம் எடுக்க உதவுகிறது.

2.95 அங்குல டிஎஃப்டி திரை பொருத்தப்பட்டிருப்பதால் மிகவும் எளிதாக உங்களுக்கு பிடித்தது போல் ஆப்சன் மற்றும் செட்டிங்குகளை மாற்றிக் கொள்ளலாம். இது ஒரு மிரர்லெஸ் கேமராவாகும்.

To read this article in English 

இந்த கேமராவில் மொத்தம் 693 ஃபோக்கஸ் பாய்ண்ட்டுகள் இருக்கின்றன. அதனால் நீங்கள் எடுக்கும் புகைப்படம் மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் உங்களுக்கு கிடைக்கும்.

இதன் ஐஎஸ்ஓ மதிப்பு மட்டும் 51200 ஆகும். தேவைப்படும் இடங்களில் 204800 என மிக எளிதாக தொட முடிகிறது. எவ்வளவு அதிகமாக ஐஎஸ்ஓ வைத்தாலும் கூட அதிக நாய்ஸ் இல்லாமல் புகைப்படம் எடுக்க முடிகிறது.

4K வீடியோக்களை 10 frames per second என்று எடுக்கலாம். டிஜிட்டல் போட்டோகிராபியின் ஆரம்ப கட்டத்தில் இருந்து அடுத்ததாக முன்னேறுபவர்களுக்கான கேமராவாக இது இருக்கிறது. Sony Alpha a7 III – ன் விலை சுமார் Rs 1,64,990 (body only) ஆகும்.

Sony Alpha a7 III வில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்

Sony Alpha a7 III, Sony Alpha a7 III சிறப்பம்சங்கள்,

Sony Alpha a7 III

Sony Alpha a7 III

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

×Close
×Close