சராசரி வருமானத்தை ஈட்டும் மக்கள் தினமும் ரூ.80 முதல் ரூ.100 வரை தங்களது போன் பயன்பாட்டிற்காக செலவு செய்கின்றனர். அந்த வாடிக்கையாளர்களை தன்பக்கம் இழுப்பதற்காகவே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது ஜியோ போனை அறிவித்துள்ளதாக கருதப்படுகிறது.
குறிப்பாக ரூ.153 என்ற குறைந்தபட்ச விலையில், தினமும் அன்லிமிடெட் கால் மற்றும் டேட்டாவை வழங்குவதற்காக ஜியோ அறிவித்துள்ளது. ரூ.80 முதல் ரூ.100 வரை மாதந்தோறும் போன் பயன்பாட்டிற்காக செலவு செய்யும் வாடிக்கையாளர்கள், ஜியோ போன் பக்கம் திரும்புவார்கள் என்ற நோக்கத்தில் ஜியோ தனது புதிய திட்டத்தை அதிரடியாக அறிவித்திருக்கிறது. முன்னதாக 4 ஜி சேவையின் மூலம் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை குறிவைத்த ஜியோ, தொடக்கத்தில இலவசமாக டேட்டா மற்றும் கால்ஸ் என ஆஃபர்கள் மூலம் வாடிக்கையாளர்களை தன்பக்கம் கவர்ந்திழுத்தது.
தற்போதைய நிலையில், ஜியோவில், ஸ்மார்ட்ஃபோன் வாடிக்கையாளர்கள் ரூ.309 -க்கு தினமும் 1 ஜி.பி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்களை பெற்றுவருகின்றனர். ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.309 என்ற ஆஃபர் இருக்கும் நிலையில் (நாள் தோறும் 1 ஜி.பி டேட்டா+ அன்லிமிடெட் கால்ஸ்), அதில் பாதி விலையில் அதாவது ரூ.153-க்கு(நாள் தோறும் 0.5 ஜி.பி டேட்டா+ அன்லிமிடெட் கால்ஸ்) ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர் வழங்கப்படுகிறது.
ஆனாலும், பேங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லின்ச் தகவலின்படி, ஜியோ போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.1,500 டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.1,500 என்ற தொகையானது ஏழ்மை நிலையில் இருக்கும் மக்களால் செலுத்துவது கடினம் என்பதால், வெகுஜன சந்தையை ஜியோவால் பெற முடியாது என்று அந்த தகவல் தெரிவிக்கிறது.
இதேபோல தான், முன்னணி மொபைல் நிறுவனத்திவ் இயக்குநர் ஒருவர் கூறும்போது, ஏழ்மை நிலையில் இருக்கும் மக்களால் இவ்வளவு தொகையை செலுத்த முடியுமா என்பதில் சந்தேகம் உள்ளது. எனவே, மக்களிடையே ஜியோ போன் வருகையானல் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்பதே எனது கருத்து என்று கூறினார்.
ஆனால், ஜியோ-வில் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து வரும் தகவல் தெரிவிப்பதாவது: ஃபீச்சர் போன் பயன்படுத்தும் மக்களை ஜியோ போன் பக்கம் ஈர்ப்பது என்பது தான் நோக்கமாக இருக்கிறது. சராசரி வருமானம் ஈட்டும் 70-80 சதவீத மக்கள் மாதந்தோறும் தோராயமாக ரூ.50 முதல் ரூ.100 ரூபாய் வரை போன் பயன்பாட்டிற்காக செலவு செய்கின்றனர். கிட்டத்தட்ட 10 முதல் 15 கோடி ஃபீச்சர்போன் வாடிக்கையாளர்கள் செலவிடும் மாதாந்திர தொகையானது, தற்போது ஜியோ போன் வழங்கும் ஆஃபருடன் ஒத்துப்போகிறது. எனவே, அவர்கள் ஜியோ போன் வருகையை எதிர்நோக்கியிருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை என கூறப்படுகிறது.
ரூ.1500 என்ற டெபாசிட் தொகையானது கிட்டத்தட்ட புதிய 2ஜி போன் வாங்குவதற்கு போதுமானது. எனினும், அந்த தொகை மீண்டும் வாடிக்கையாளர்களிடம் வழங்கப்படும் என்பதால், ஜியோ போன் முற்றிலும் இலவசமான ஒன்றுதான். மேலும், ஜியோ போன் வாடிக்கையாளர்கள் 36 மாதங்களுக்கும் டேரிஃப் பிளானை பயன்படுத்த வேண்டும், ஒருவேளை அவர்கள் அந்த ஜியோ போனை பயன்படுத்தவில்லை என்றால், டெபாசிட் தொகையில் அந்த தொகை பிடித்தம் செய்யப்பட்டு திரும்பக் கொடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜியோ 4ஜி சேயையை மட்டுமே வழங்குகிறது என்பதால், மற்ற நிறுவங்களுடன் நிலவும்போட்டியை சமாளிக்க 2ஜி வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 4 ஜி பயன்படுத்தும் வகையில் 4ஜி ஸ்மார்ட்போன்களை ஜியோ முன்னதாக வெளியிட்டது. சுமார் ரூ.3000 முதல் அந்த ஸ்மார்ட்போன் விற்பனையில் உள்ளது. எனினும், அந்த ஸ்மார்போன்களை கொண்டு மட்டுமே வாடிக்கையாளர்களை வர்திழுப்பது கடினம். 2ஜி வாடிக்கையாளர்களை 4ஜி-க்கு மாற்றும்பட்சத்தில், அது எளிதானதாக இருக்கும் என்பதால் ஜியோ போன் மூலமாக சந்தைக்குள் ஆதிக்கத்தை செலுத்த தயாராகி வருகிறது ஜியோ.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.