இந்திய-அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் நீண்ட காலத்திற்கு பிறகு நாளை (செவ்வாய்கிழமை) போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தின் க்ரூ ஃப்ளைட் டெஸ்ட் (CFT) பணியில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) செல்கிறார். போயிங் விண்கலத்தின் முதல் மனித விண்வெளிப் பயணத்தை சோதனை செய்து ஆய்வு மேற்கொள்கிறோர்.
58 வயதான வில்லியம்ஸ் உடன் நாசா விண்வெளி வீரர் பாரி "புட்ச்" வில்மோர் ( 61) உடன் செல்கிறார். 2 நபர்கள் பயணிக்கும் இந்த விண்கலம் நாளை (மே 7) விண்ணில் ஏவப்படுகிறது. புளோரிடாவில் உள்ள கேப் கனாவரல் விண்வெளித் தளத்தில் இருந்து யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் அட்லஸ் V ராக்கெட்டில்
இந்திய நேரப்படி நாளை செவ்வாய்க்கிழமை காலை 8:04 மணிக்கு விண்கலம் ஏவப்படுகிறது.
இந்த வரலாற்றுப் பணியானது, போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மனிதர்களை ஏற்றிச் செல்ல தகுதியானதா என்பதை சோதிக்கும். மேலும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்களை அவ்வப்போது அனுப்பும் நாசாவின் crew rotations திட்டத்திற்கும் இது உகந்தா என்பதையும் சோதிப்பது திட்டத்தின் நோக்கமாகும். நாசா தற்போது ஸ்பேஸ்எக்ஸின் க்ரூ டிராகன் விண்கலத்தில் வீரர்களை அனுப்பி வரும் நிலையில் 2-வது ஆப்ஷனாக இதை பயன்படுத்துதை சோதனை செய்கிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸின் நீண்ட காலம் அனுபவம் மற்றும் வில்மோரின் test acquisition மற்றும் ஒருங்கிணைந்த அமைப்புகள் திட்டமிட்டபடி செயல்படுவதை உறுதி செய்யும் அவரது திறன் ஆகியவை இந்த திட்டத்திற்கு சேர வழிவகுத்தது.
10 நாள் பயண திட்டத்தில், வில்மோர் மற்றும் வில்லியம்ஸ் ஆகியோர் ஸ்டார்லைனரின் அமைப்புகள் மற்றும் திறன்களை முழுமையாகச் சோதனை செய்வர். இதன் மூலம் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையப் பயணங்களுக்கு தகுதியானதா என்பதை அறிய வழி வகுக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“