Advertisment

2024-ன் முதல் சூப்பர் மூன் நிகழ்வு: எங்கு, எப்போது பார்க்கலாம்?

இந்தாண்டு 2024-ல் 4 சூப்பர் மூன் நிகழ்வு நடைபெற உள்ளது. முதல் நிகழ்வு அடுத்த மாதம் வருகிறது.

author-image
sangavi ramasamy
New Update
supermoon

சூப்பர் மூன் என்பது வழக்கமான முழு நிலவை விட சற்று பெரியதாகவும் பிரகாசமாகவும் இருக்கும். நிலவின் பெரிஜி அல்லது நிலவின் சுற்றுப்பாதையில் உள்ள புள்ளி பூமிக்கு அருகில் வரும் போது இந்த நிகழ்வு நடைபெறுகிறது. 

Advertisment

சில நேரங்களில் இது முழு நிலவு நாள் உடன் ஒத்துப்போகிறது, அந்த நேரத்தில் அது சூப்பர் மூன் என்று அழைக்கப்படுகிறது. இப்போது, ​​​​அடுத்த சூப்பர் மூன் எப்போது வருகிறது என்பது பற்றி பார்ப்போம். 

அடுத்த சூப்பர் மூன் ஆகஸ்ட் 19-ம் தேதி இந்தியா நேரப்படி இரவு 11:56 மணிக்கு நிகழும் என்று கூறப்படுகிறது. இது இந்த ஆண்டின் முதல் சூப்பர் மூன்னாகும். 

2024-ன் முதல் சூப்பர் மூன்

கிரகண நிபுணரும் முன்னாள் நாசா வானியற்பியல் நிபுணருமான ஃப்ரெட் எஸ்பானக் கூறுகையில், 2024ல் நான்கு சூப்பர் மூன் நிகழ்வுகள் இருக்கும் என்று கூறினார். ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அவை நிகழும் என்றார். 

 

எஸ்பானக் கூற்றுப்படி, பூமிக்கு மிக அருகில் வரும் 90 சதவிகிதத்திற்குள் வரும் சூப்பர் மூன் நிலவு நிகழ்வுகள் முழு நிலவு என்று வரையறுக்கிறது. அவரது கூற்றுகளின் அடிப்படையில், 2024-ம் ஆண்டின் மிக நெருக்கமான சூப்பர் மூன் அக்டோபர் 17 ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4:56 மணிக்கு நடக்க உள்ளது.  

சூப்பர்மூன்கள் ஒரு பொதுவான நிகழ்வு மற்றும் ஒவ்வொரு ஆண்டும் மூன்று முதல் நான்கு சூப்பர் மூன்களை எதிர்பார்க்கலாம். சூப்பர் மூன் என்ற வார்த்தை கடந்த நான்கு தசாப்தங்களில் நடைமுறைக்கு வந்தாலும், 2016 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக மூன்று சூப்பர் மூன்கள் வந்த பிறகு இது கவனத்தை ஈர்த்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment