Advertisment

ஆண்ட்ராய்டு, ஆப்பிள் பயனர்கள் கவனத்திற்கு: ரூ.45,000 கீழ் அசத்தலான டேப் இங்கே

ஆண்ட்ராய்டு, ஆப்பிள் பயனர்கள் அனைவரும் விரும்பும் வகையில் ரூ.45,000க்குள் சிறந்த டேப்லெட் சாதனம் குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
sangavi ramasamy
New Update
10th Gen iPad

10th Gen iPad with the official keyboard folio (Image credit: Nandagopal Rajan/The Indian Express)

டேப்லெட் சாதனம் பயன்படுத்துவதற்கு மிக எளிதாகவும், லேப்டாப்களுக்கு முன்னோடியாகவும் உள்ளது. வெளியில் எங்காவது எடுத்துச் செல்வதற்கும் எளிதாக உள்ளது. லேப்டாப் எடுத்துச் செல்ல தனி பேக் வேண்டும் ஆனால் இது அப்படி அல்ல நாம் பயன்படுத்தும் பேக்-ல் வைத்து எளிதாக கொண்டு செல்லலாம். குறைந்த விலையில் சிறந்த டேப்லெட் சாதனங்களை வாங்கலாம். ஆண்ட்ராய்டு, ஆப்பிள் பயனர்கள் அனைவரும் விரும்பும் வகையில் ரூ.45,000க்குள் சிறந்த டேப்லெட் சாதனம் குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

ஐபேட் (10th ஜென்) - ரூ 41,990

நீங்கள் ஐபோன் பயனராக இருந்தால் மற்றும் புதிய டேப்லெட் வாங்க விரும்புபவராக இருந்தால் இந்த 10th ஜென் ஐபேட் நிச்சயம் உங்களுக்கு சிறந்த ஆப்ஷனாக இருக்கும். விலை உயர்ந்த iPad Air மற்றும் iPad Pro போன்றே, இந்த ஐபேட்-ம் அதிக அம்சங்களைக் கொண்டுள்ளது. சார்ஜிங்-க்கு USB Type-C போர்ட்டிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஐபாட் பல வண்ணங்களில் கிடைக்கிறது. ஐபேட் டிசைனும் ஆப்பிளின் சமீபத்திய டேப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. ரீமியம் மெட்டல் யூனிபாடி பில்ட் முதல் 10.9-இன்ச் QHD டிஸ்ப்ளே வரை, இந்த iPad சிறந்த டேப்லெட் அனுபவத்தை iPadOS மூலம் வழங்குகிறது.

publive-image

ஒன்பிளஸ் பேட்- ரூ 36,990

40,000 ரூபாய்க்கும் குறைவான விலையில், OnePlus இன் முதல் டேப்லெட் மற்றொரு சிறந்த தேர்வாகும். பிரீமியம் டிசைன் முதல் மேம்படுத்தப்பட்ட பல அம்சங்கள் வரை OnePlus பேட் 10th ஜென் ஐபேட்க்கு ஒரு சிறந்த மாற்றாக இருக்கும். 11.61-இன்ச் டிஸ்பிளே 144Hz வரையிலான ஹை ரீபிரஸ் ரேட் மற்றும் பவர்புல் மீடியாடெக் டைமன்சிட்டி 9000 ப்ராசஸருடன் OnePlus பேட் ஸ்டார் அனுபவத்தை வழங்குகிறது. மேலும் மற்றொரு சூப்பரான அம்சம் கீபோர்ட் கேஸ் மற்றும் டிராக்பேட் சப்போர்ட் கொண்டுள்ளது.

publive-image

Samsung Tab S7 SE-ரூ.41,990

இந்த டேப் அறிமுகம் செய்யப்பட்டு 2 ஆண்டுகள் ஆனாலும் Samsung Tab S7 SE இன்னும் ஒரு சிறந்த ஆண்ட்ராய்டு டேப்லெட் தேர்வாக உள்ளது. இந்தச் சாதனம் பிரீமியம் மெட்டல் யூனிபாடி வடிவமைப்பை வழங்குகிறது. Qualcomm Snapdragon 778G ப்ராசஸர் கொண்டுள்ளது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வழங்குகிறது. OneUI மூலம் இயக்கப்படும் டேப் customisable ஆகும். ஐபாட் போலவே, சாம்சங் நீட்டிக்கப்பட்ட மென்பொருள் ஆதரவையும் உறுதியளிக்கிறது.

Xiaomi Pad 6- ரூ.26,990

ஜியாமி பேட் 6 ரூ.40,000க்கு கீழ் கிடைக்க கூடிய புரோ-கிரேடு ஆண்ட்ராய்டு டேப்லெட்டுகளில் ஒன்றாகும். 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வழங்குகிறது. ஸ்னாப்டிராகன் 870 SoC உடன், இது 2K தெளிவுத்திறனுடன் 11-இன்ச் 144Hz டிஸ்ப்ளேவைக் கொண்ட சிறந்த டேப்லெட்டுகளில் ஒன்றாகும். டேப்லெட் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 8,840 mAh பேட்டரி கொண்டுள்ளது.

பெரும்பாலான பட்ஜெட் டேப்லெட்டுகளைப் போலல்லாமல், Xiaomi Pad 6 ஆனது, டைப்-சி போர்ட் வழியாக USB 3.2 தரவு பரிமாற்ற வேகத்தை வழங்குகிறது.

publive-image

ஐபேட் 9th ஜென்- ரூ.27,990

Xiaomi Pad 6ஐப் போலவே, 9th Gen iPad-யும் ரூ. 30,000க்கும் குறைவான விலையில் வாங்கலாம், மேலும் லைட்டிங் போர்ட் மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவற்றைக் கொண்ட கடைசி iPad இதுவாகும். இந்த மாடல் விண்டேஜ் ஐபாட் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, முன்புறத்தில் முகப்புப் பொத்தான் மற்றும் ஒருங்கிணைந்த டச் ஐடி உள்ளது. டேப்லெட்டில் 10.2 இன்ச் 2K 60Hz லேமினேட் அல்லாத டிஸ்ப்ளே உள்ளது. 9 வது தலைமுறை iPad இன் சிறந்த பகுதி iPadOS இன் சமீபத்திய பதிப்புடன் இணக்கமாக உள்ளது.

Lenovo P11 Pro Gen 2: ரூ 44,999

Lenovo P11 Pro Gen 2 விலை சற்று அதிகமாக இருந்தாலும் மீடியா பயனர்களுக்கு இது சிறந்த ஆண்ட்ராய்டு டேப்லெட் தேர்வாகும். 11.5-இன்ச் ஓ.எல்.இ.டி ஸ்கீரின் மற்றும் டால்பி அட்மாஸ் ஆதரவுடன் குவாட்-ஸ்பீக்கர் அமைப்புடன் வருகிறது. ஸ்டாக் ஆண்ட்ராய்டு UI வழங்குகிறது. மேலும் 8,600 mAh பேட்டரி ஆதரவு நாள் முழுக்க பேட்டரி லைவ் வழங்க முடியும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Samsung Android
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment