டாட்டா ஹேரியர் கார் வெளியீடு : விலை மற்றும் இதர விபரங்கள்...

டிசம்பர் 2018 வரை சுமார் 16,000 கார்கள் ப்ரீ புக்கிங் மூலம் புக் செய்யப்பட்டது.

Tata Harrier SUV India Launch :  டாட்டா மோட்டார்ஸ் சென்ற வருடம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2018 கண்காட்சியில் H5X அடிப்படையில் உருவாக்கப்பட்ட கார் பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது டாட்டா நிறுவனம்.

ஹாரியர் என்ற மாடல் பெயரில் வெளியாகியுள்ள இந்த காரின் ப்ரீ புக்கிங் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஆரம்பமானது. டிசம்பர் 2018 வரை சுமார் 16,000 கார்கள் ப்ரீ புக்கிங் மூலம் புக் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று வெளியானது டாட்டா ஹேரியர் கார். நான்கு அற்புதமான நிறங்களில் வெளியாக இருக்கும் இந்த காரின் சிங்கிள் டீசல் எஞ்சின் – மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

Tata Harrier SUV India Launch – விலை

ஹாரியர் எஸ்.ஈ ( Harrier XE )காரின் விலை 12.69 லட்சம்
மிட்-ஸ்பெக் எக்ஸ்.எம் (mid-spec XM) – 13.75 லட்சம்
எக்ஸ்.டி. – 14.95 லட்சம்
ரேஞ்ச் டாப்பிங் எக்ஸ்.ஜீ ( Range-topping XZ ) – 16.25 லட்சம்

Tata Harrier SUV India Launch – நிறங்கள்

கலிஸ்டோ காப்பர் – Calisto Copper
தெர்மிஸ்டோ கோல்ட் – Thermisto Gold
ஏரியல் சில்வர் – Ariel Silver
டெலெஸ்டோ கிரே – Telesto grey
ஆர்கஸ் வொய்ட் – Orcus White

இதர சிறப்பம்சங்கள்

2.0 லிட்டர் டீசல் எஞ்சின்
140 ஹார்ஸ் பவர்
350 NM டார்க்
6-ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ்

Tata Harrier SUV India Launch

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close