வருகிறது செயற்கை ‘கர்ப்பப்பை’: பெண்கள் கருவடையாமலேயே இனி குழந்தை பிறப்பு சாத்தியம்

செயற்கை கர்ப்பப்பை என்பது கருவுற்ற சினை முட்டையை ‘செயற்கை கர்ப்பப்பையில்’ வைத்து பாதுகாத்து வளர்க்கும் முறை.இதுதான் எதிர்காலத்தில் அனைத்தையும் விஞ்சும்.

சோதனைக் குழாய் மூலம் குழந்தை, ஆண்கள் குழந்தை பெறுதல், மாற்றுப் பாலினத்தவர்கள் குழந்தை பெறுதல் என குழந்தை பிறப்பில் நிகழவே நிகழாது என பெரும்பாலானோர் கங்கனம்கட்டிக்கொண்டு நின்ற எல்லா அதிசயங்களும் மருத்துவ உலகில் சாத்தியமாகிவிட்டன.

அதேபோல், குழந்தை பேறு இல்லாத தம்பதியருக்கும், குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லாத தம்பதியருக்கும் வரப்பிரசாதமாக ஒரு தொழில்நுட்பம் வர உள்ளது. என்னது குழந்தைப் பெற்றுக்கொள்ள தொழில்நுட்பமா என்கிறீர்களா? ஆமாம், அதுதான் ‘செயற்கை கர்ப்பப்பை’. இனி பெண்களின் கர்ப்பப்பையில் தான் குழந்தை வளரும் என்ற நம்பிக்கையை இந்த தொழில்நுட்பம் தகர்த்துவிடும். செயற்கை கர்ப்பப்பை என்பது கருவுற்ற சினை முட்டையை ‘செயற்கை கர்ப்பப்பையில்’ வைத்து பாதுகாத்து வளர்க்கும் முறை.

Artez Product Design Arnhem என்ற கல்லூரி மாணவர்கள் குழுவினர் Par-Tu-Ri-Ent ]என்ற செயற்கை கர்ப்பப்பையை வடிவமைத்துள்ளனர். அந்த கருவியில் கருவுற்ற சினை முட்டையை வைத்து அது முழு வளர்ச்சியை அடைந்த குழந்தையாக மாறும் வரை பாதுகாக்க வேண்டும். பார்ப்பதற்கு கர்ப்பப்பை போன்ற தோற்றத்தில் உள்ளது. அதனுள் சிறிய மின்விளக்கின் வெளிச்சமும் உண்டு. அதனால், தங்கள் குழந்தை வளர்வதை பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க முடியும்.

தாயும், தந்தையும் அந்த கர்ப்பப்பையில் வளரும் தங்கள் குழந்தையுடன் உரையாட அதனுடன் மைக்ர்டோஃபோன் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், குழந்தையுடன் உரையாட முடியும்.

அதுமட்டுமல்லாமல், சிறிய பேக் வடிவிலான அமைக்கப்பட்டதை, தாய் எங்கு வேணாலும் எடுத்துச் சென்று, அதிலுள்ள பட்டனை அழுத்துவதன் மூலம் குழந்தையால் தாயின் அரவணைப்பை உணரும் வகையில் செயற்கை கர்ப்பப்பை வடிவமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைக்கு கிடைக்கக்கூடிய சத்துக்களுக்கு என்ன செய்வது என யோசிக்கிறீர்களா? குழந்தை பிறந்தபின்பு அது எவற்றையெல்லாம் விரும்பி உண்ண வேண்டும் என நினைக்கிறீர்களோ அதனை தயார் செய்து, அந்த ‘செயற்கை கர்ப்பப்பையுடன்’ பொருத்திக் கொண்டால் அவற்றின் சத்துக்கள் குழந்தையை சென்றடைந்து முழு வளர்ச்சிக்கு உதவும்.

அதன்பிறகு, குழந்தை முழு வளர்ச்சியை அடைந்தவுடன் அதனை திறந்து குழந்தையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த தொழில்நுட்பம் கேட்க அபத்தமாகவும், தார்மீகமற்றதாகவும் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதனால், இதுவரை இந்த இயந்திரம் சந்தைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close