/tamil-ie/media/media_files/uploads/2017/10/1-airtel-jio-.jpg)
ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன் ரூ.1399 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஏர்டெல் நிறுவனமானது, கார்பன் மொபைல்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஃபீச்சர்போன் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது சமீபத்தில் ஜியோபோனை அறிமுகம் செய்திருந்தது. ஃபீச்சர்போன் என்ற வகையில் அதிக சிறப்பம்சங்களை ஜியோபோன் பெற்றிருந்தது. ரூ.1500 பாதுகாப்பு தொகையாக செலுத்த வேண்டும் எனவும், அந்த தொகை மூன்று வருடங்களுக்கு பின்னர் வாடிக்கையாளர்களிடமே திரும்ப கொடுக்கப்படும் என ரிலையன்ஸ் ஜியோ அறிவித்திருந்தது. இதன் மூலம் ஜியோபோன் இலவசம் என்று அறிவித்த ஜியோ, இதற்காக சில நிபந்தனைகளும் விதித்திருந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2017/10/2airtel-jio-3.jpg)
இந்த நிலையில், ஜியோவின் போட்டியை சமாளிக்கும் வகையில், ஏர்டெல் நிறுவனமானது ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக ஏர்டெல் நிறுவனமானது கார்பன் மொபைல்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஃபீச்சர்போன் விலையில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படும் என்பது ஏர்டெல் அளித்துள்ள சிறப்பம்சமாகும்.
/tamil-ie/media/media_files/uploads/2017/10/3Jio-Phone-1.jpg)
முன்னதாக கார்பன் ஏ4(Karbonn A40) ஸ்மார்ட்போனின் முந்தைய விலையானது ரூ.3499 என்றிருந்தது. ஏர்டெல் நிறுவனம் கார்பன் நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தினால், தற்போது கார்பன் ஏ4(Karbonn A40) ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,99 என்ற விலைக்கு குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 4இன்ச் டிஸ்ப்ளே மற்றும் டுயல் சிம் பொருத்திக் கொள்ளும் வசதி உள்ளது. ஏர்ட்ல் ஸ்மார்ட்போன், கூகிள் ப்ளே ஸ்டோரில் உள்ள அனைத்து ஆப்ஸ்-ஐ பயன்படுத்த அனுமதி வழங்குகிறது. அதேநேரத்தில், ஜியோபோனில் ஆண்ட்ராய்டு ஆப்ஸை பயன்படுத்த முடியாது என்பது கவனிக்கத்தக்கது. ஜியோபோனில் அந்நிறுவனத்தின் ஆப்ஸை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிட்த்தக்கது.
/tamil-ie/media/media_files/uploads/2017/10/4Airtel-Jio-1.jpg)
ஜியோபோனானது ப்ரி-லோடட் ஜியோ சிம்முடன்( pre-loaded Jio SIM) வெளிவருகிறது. ஜியோபோன் வாங்கும்போது ஆதார் எண் வழங்க வேண்டும் என்பதோடு, ரூ.153 ரீசார்ச் செய்ய வேண்டும். இதன்பின்னர், தான் ஜியோபோன் ஆக்டிவேட் செய்யப்படும். ரூ.153 என்ற ப்ளானை பொறுத்தவரையில், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், நாள்தோறும் 500 எம்.பி டேட்டா வழங்கப்படுகிறது.(குறிப்பு: வேறு ப்ளான்களும் உள்ளன)
/tamil-ie/media/media_files/uploads/2017/10/5airtel-1.jpg)
ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போனானது ரூ.169 என்ற ப்ளானில், டேட்டா மற்றும் கால்ஸ் போன்றவை வழங்கப்படுகிறது. ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமானால், டவுண்பேமெட்டாக முதலில் ரூ.28,99 செலுத்த வேண்டும். அதோடு, 36 மாதங்களுக்கு ரூ.169 என்ற தொகையில் ரீசார்ச் செய்ய வேண்டும். இதன் மூலம் ரூ.15,00 தொகை வாடிக்கையாளர்களுக்கு திரும்ப கொடுக்கப்படும் என ஏர்டெல் தெரிவித்துள்ளது. முதல் 18 மாதங்களில் ரூ.500 தொகையும், 36 மாதங்களுக்குப் பின்னர் மீதமுள்ள ரூ.1000 திரும்ப கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2017/10/6Karbonn.jpg)
ரூ.169 என்ற ப்ளான் வேண்டாம் என்று நினைப்பவர்கள், எந்த ப்ளானிலும் ரீசார் செய்து கொள்ளலாம். ஆனால், முதல் 18 மாதங்களில் குறைந்த பட்சமாக ரூ.3,000-க்கு ரீசார்ச் செய்திருந்தால் தான், ரூ.500 தொகையை முதற்கட்டமாக பெற முடியும். இதேபோல, அடுத்த 18 மாதங்களுக்கு, ரூ.3,000 ரீசார்ச் செய்திருந்தால் தான் மீதமுள்ள ரூ.1500 தொகையை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்பன் ஏ40 ஸ்மார்ட்போனானது டுயல் சிம் பொருத்திக்கொள்ளும் வசதி கொண்டு ள்ள நிலையில், ஏர்டெல்-ன் மைஏர்டெல், ஏர்டெல்டிவி, வின்க் மியூசிக் உள்ளிட்ட ஆப்ஸ் ப்ரீ-லோடு செய்யப்பட்டிருக்கும். 1.3 GHz ப்ராசஸருடன் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன், 1 ஜி.பி ரேம் மற்றும் 8 ஜி.பி ரோம் கொண்டிருக்கிறது. மைக்ரோ எஸ்.டி கார்டு மூலமாக 32 ஜி.பி வரை அதிகரித்துக் கொள்ள முடியும். 1,400 mAh திறன் கொண்ட பேட்டரி உள்ளது. டுயல் 2 எம்.பி ரியர் கேமராவுடன், 0.3 எம்.பி முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2017/10/7Jio-Phone.jpg)
ஃபீச்சர்போன் வகையில் வரும், ஜியோபோன் 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளேவை(y (320 x 240 pixels) கொண்டுள்ளது. டுயல்-கோர் பிராசஸர் என்ற நிலையில், ஸ்பெரட்ரம் 9820ஏ அல்லது குவால்காம்ஸ் ஸ்னாப்டிராகன் 210 (Spreadtrum 9820A or Qualcomm's Snapdragon 210) வழங்கப்பட்டுகிறது. 512 எம்.பி ரேம் மற்றும் 4ஜி.பி ஸ்டோரேஜ் மற்றும் மைக்ரோ எஸ்.டி கார்டு மூலமாக 128 ஜி.பி வரை அதிகரித்துக்கொள்ளலாம். விஜிஏ ரெசொலூசனுடன் கூடிய முன்பக்க கேமரா மற்றும் 2.எம்.பி ரியர் கேமரா உள்ளது. 2000 mAh தினன் கொண்ட பேட்டரியுடன் வெளிவருகிறது இந்த ஜியோபோன்.
ஏர்டெல் ஸ்மார்ட்போனுக்கும் ஜியோபோனுக்கும் இடையே உள்ள சிறம்பம்சங்களின் வித்தியாசங்கள்;
/tamil-ie/media/media_files/uploads/2017/10/8Airtel-comparison-1.jpg)
ஆஃபர் மற்றும் விலை ஆகியவற்றின் அடிப்படையில் ஜியோபோன் மற்றும் ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போனுக்கும் இடையேயான வித்தியாசங்கள்;
/tamil-ie/media/media_files/uploads/2017/10/9Airtel-comparison-2.jpg)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us