Advertisment

33W ஃபாஸ்ட் சார்ஜிங், டிரிபிள் கேமரா.. ரூ. 15,000-க்குள் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள்

Best 5 smartphones under Rs. 15,000: ரூ.15,000 கீழ் உள்ள சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

author-image
sangavi ramasamy
New Update
33W ஃபாஸ்ட் சார்ஜிங், டிரிபிள் கேமரா.. ரூ. 15,000-க்குள் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள்

ஸ்மார்ட்போன்கள் நம் அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. சாம்சங், ரெட்மி, Poco எனப் பல முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் உள்ளன. பயனர்களின் வசதிக்கு ஏற்ப நிறுவனங்கள் புது புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், ரூ. 15,000 பட்ஜெட்டில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங், டிரிபிள் கேமரா, 4ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

Advertisment

Redmi Note 11

ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 6.43 இன்ச் 90Hz AMOLED டிஸ்பிளே கொண்டது. Snapdragon 680 4G சிப்செட், ஆண்ட்ராய்டு 11 இல் இயங்குகிறது. 8MP அல்ட்ராவைடு சென்சார், 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 2MP டெப்த் சென்சார் உள்ளது. அதோடு 50 MP பிரைமரி சென்சாருடன் வருகிறது. இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 5,000mAh பேட்டரி கொண்டுள்ளது. 4ஜிபி ரேம் / 64ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டது. ரூ.13,499 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

publive-image

Poco M4 5G

ரூ.15,000 பட்ஜெட்டில் வாங்க சிறந்த ஸ்மார்ட்போன். Poco M4 5G ஆனது MediaTek Dimensity 700 சிப்செட், 6.58 இன்ச் 90Hz IPS LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த போன் MIUI 13 இல் இயங்கும் ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆஃப் பாக்ஸ் அடிப்படையிலானது. 2MP டெப்த் சென்சார், டூயல் கேமரா அமைப்புடன் வருகிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 5,000mAh பேட்டரி. பிளிப்கார்ட் தளத்தில், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் போன் ரூ.13,199 விலையில் கிடைக்கிறது.

publive-image

Oppo A74 5G

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Oppo A74 ஆனது Qualcomm Snapdragon 480 5G சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. FullHD+ resolution, 6.5 இன்ச் 90Hz IPS LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 11 அவுட் ஆஃப் பாக்ஸ் அடிப்படையிலான ColorOS 11.1 இல் இயங்குகிறது. 48MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ராவைட் லென்ஸ், 2MP மேக்ரோ சென்சார், மற்றும் 2MP டெப்த் கேமராவுடன் குவாட் கேமரா அமைப்பு உள்ளது. 5,000mAh பேட்டரி, 18W சார்ஜிங். அமேசானில் ரூ.14,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

publive-image

Motorola G60

Qualcomm Snapdragon 732G வசதியுடன், Motorola G60 ஆனது 6.8 இன்ச் 120Hz IPS LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 11 இல் இயங்குகிறது.

டிரிபிள் கேமரா வசதி

108MP - பிரைமரி கேமரா

8MP - அல்ட்ராவைடு லென்ஸ்

2MP- டெப்த் சென்சார்

128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி வரை ரேம் உள்ளது. மோட்டோரோலா G60 ஆனது 6,000mAh பேட்டரியுடன் 20W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது. இதன் விலை 14,999 ஆகும்.

Samsung Galaxy M32

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy M32 ஆனது MediaTek Helio G80 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 11 அவுட் ஆஃப் பாக்ஸ் அடிப்படையிலான One UI 3.1 இல் இயங்குகிறது. 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ராவைட் லென்ஸ், 2MP மேக்ரோ சென்சார் மற்றும் 2MP டெப்த் கேமராவுடன் குவாட் கேமரா அமைப்புடன் வருகிறது. இது 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 15W வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கிறது. அமேசான் தளத்தில் ரூ.11,499க்கு விற்பனை செய்யப்படுகிறது.

publive-image

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Smartphone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment