இந்த ஆண்டின் "பெஸ்ட் ஆப்ஸ்" உங்க ஸ்மார்ட்போனில் இருக்குதா?

கூகிள் ப்ளே ஸ்டோரில் 3 மில்லியனுக்கும் மேற்பட்ட ஆப்ஸ்கள் குவிந்து கிடக்கின்றன. இதில் நமக்கு தேவையான சில ஆப்ஸ் மட்டுமே நாம் பயன்படுத்துவோம்.

கூகிள் ப்ளே ஸ்டோரில் 3 மில்லியனுக்கும் மேற்பட்ட ஆப்ஸ்கள் குவிந்து கிடக்கின்றன. இதில் நமக்கு தேவையான சில ஆப்ஸ் மட்டுமே நாம் பயன்படுத்துவோம். அந்த வகையில் ஸ்மார்ட்போனில் நாம் டவுன்லோடு செய்திருக்கும் ஆப்ஸ்களில் பல பயனற்று ஸ்டோரேஸை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்.  அப்படி இருக்கும் நிலையில் 2017-ம் ஆண்டுக்கான உபயோகமான ஆண்ட்ராய்டு ஆப்ஸை தற்போது பார்க்கலாம். இதில் வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்ட பேஸ்புக், மெசென்ஜர், வாட்ஸ்அப், யூடியூப், ஆகிவற்றை தவிர்த்து மற்ற ஆப்ஸ் குறித்து பட்டிலிடப்பட்டுள்ளது.

Find My device- என்ற ஆப்ஸ் மூலம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் தொலைந்து போன உங்களது ஸ்மார்ட்போனின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள முடியும். மேலும், ஸ்மார்ட்போன் சைலன்டில் இருக்கும்பட்சத்தில் அதனை கண்டறியும் விதமாக ஒலி எழுப்பும் சில வசதிகளும் உள்ளன. தொலைந்து போன உங்களது மொபைல்போனில் உள்ள டேட்டாவை கூட அழித்துவிட முடியும்.

last-pass

LastPass: லாஸ்ட் பாஸ் ஆப்ஸ் மூலம் உங்களது ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்களை லாக் செய்து பாதுபாப்பாக வைத்துக் கொள்ள முடியும். இந்த ஆப்ஸ், வெப் ப்ரவுசர் மற்றும் மற்ற ஆப்ஸ் லாக் இன் தானாகவே நிரப்பிக் கொள்ளும். அதற்கு லாஸ்ட்பாஸ் ஆப்ஸின் ஒரே ஒரு பாஸ்வேர்டு போதுமானது.

Monefy:உங்களது செலவீனங்களை எவ்வாறு கையாளுவது என்பது குறித்த ஆப்ஸ் தான் இந்த மணிஃபை. நீங்கள் செலவு செய்யும் பணத்தை எந்த வகையில் செலவிட்டீர்கள் என்பதை மட்டும் இதில் செலக்ட் செய்தால் போதுமானது. அது காஃபியோ அல்லது கால் டேக்ஸியோ, எதுவாக இருந்தாலும் அதற்கு செலவு செய்த தொகையை மட்டும் தேர்வு செய்து கொள்ள முடியும்.

camscanner

CamScanner:கேம்ஸ்கேனர் என்பது மொபைல் டாகுமென்ட் ஸ்கேனிங் மற்றும் ஷேரிங் செய்வதற்கான ஆப். இதனை 100 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் டவுண்லோடு செய்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த கேம்ஸ்கேனர் மூலமாக பல்வேறு விதமான கோப்புகளை ஸ்கேன் செய்தல், ஸ்டோர் செய்தல் உள்ளிட்ட செயல்களை ஸ்மார்ட்போன், கம்யூட்டர், டேப்லட் உள்ளிட்ட சாதனங்களில் மேற்கொள்ள முடியும். உங்களது சாதனத்தில் உள்ள கேமரா மூலமாக நோட்ஸ், இன்வாய்ஸ், பிஸினஸ் கார்ட்டு, சர்ஃபிகேட் ஆகியவற்றை ஸ்கேன் பண்ணலாம்.

IFTTT: இந்த ஆப்ஸ் மூலமாக உங்களுக்கு பிடித்தமான சேவைகளை ஒரே இடத்தில் பெற முடியும். ஆம், 400-க்கும் மேற்பட்ட ஆப்ஸை ஒரே ஒரு ஆப்ஸின் கட்டுப்பாட்டில் பயன்படுத்த முடியும்.

google-drive

Google Drive:ஃபைல்களை பாதுபாப்பாக வைத்திருப்தோடு, ஸ்மார்ட்போன், டேப்லட் மற்றும் கம்யூட்டர் போன்றவற்றின் மூலமாக எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும். குறிப்பாக, வீடியோ, ஃபோட்டோஸ், கோப்புகள் போன்றவற்றை பத்திரமாக பேக்-அப்பாக அப்படியே இணையதளத்தில் உங்களது கட்டுப்பாட்டில் இருக்கும்.

google-fit

Google Fit: கூகிள் வெளியிட்டுள்ள இந்த ஆப்ஸ் மூலம் உங்களது அன்றாட வாழ்வின் நடவடிக்கைகளை கண்காணித்துக் கொள்ள இயலும். நடக்கும் போது, ஓடும் போது மற்றும் சைக்கிள் பயணம் என அனைத்தையும் கூகிள் வாட்ச் அல்லது போன் மூலம் கண்காணிக்கலாம். இந்த ஆப் உங்களது ஸ்பீடு, செல்லும் வழி உள்ளிட்ட பல்வேறு தகவல்களை நம்மிடம் இருந்து எடுத்துக் கொள்ளும். இதன் மூலம், நமது ஃபிட்னஸ் குறித்த தகவல்களை நாம் எளிதாக அறிந்து கொள்ளலாம்.

amazon-kindle

Amazon Kindle: அமேசான் நிறுவனத்தின் இந்த ஆப்ஸானது மில்லியன் கணக்கிலான புத்தகங்களை உங்களின் விரல் நுனியில் கொண்டு வந்துவிடும். இந்த ஆப்ஸானது வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் வைத்திருக்க வேண்டும். மேகசின், புத்தகம் அல்லது செய்தித்தாள் என எதை படிக்க விரும்பினாலும் இந்த Amazon Kindle பயனுள்ளதாக இருக்கும்.

AnyDo

Any.do: இந்த ஆப் மூலமாக கேலன்டர், ரிமைன்டர், லிஸ்ட் மற்றும் நோட்ஸ் ஆகியவற்றை கையாள முடியும்.

Flipboard: இந்த ஆப்ஸை தினமும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் தினமும் பயன்படுத்துகின்றனர். அனைத்து விதமான செய்திகள், தகல்களையும் காணலாம். பிடித்தமான விஷயங்களையும், பல்வேறு செய்திகளையும் ஒரே ஆப்ஸ் மூலம் காண முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். குறிப்பிடும்படியாக ஃபோட்டோகிராஃபி, பயணம், டெக்னாலஜி, பேஷன் என அனைத்தும் இதில் அடக்கம்.

pocket

Pocket: இந்த ஆப்ஸ் மூலம் இணையதளத்தில் நாம் படிக்க விரும்பும் ஸ்டோரிஸ், பார்க்க விரும்பும் வீடியோ அல்லது அதன லிங்க் ஆகியவற்றை சேவ் செய்து கொள்ள முடியும். இது உங்களது போன், டேப் மற்றும கம்யூட்டர் ஆகியவற்றில் நீங்கள் சேவ் செய்தவற்றை சிஃங் செய்து கொள்ளும். இதன் மூலம் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது, படிக்கவோ, வீடியோ பார்க்கவோ நேரத்தை செலவிடலாம்.

Simple-note

Simplenote: நோட்ஸ், ஐடியோஸ் போன்றவற்றை எளிதில் சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.

nova-launcher

Nova Launcher:நோவா ஸ்கேனர் உங்களது ஹோம் ஸ்கிரீனை உங்களது விருப்பப்படி மாற்றுவதற்கு உதவி செய்யும். இதன் மூலம், ஐகான், அனிமேஷன், லேய்அவுட் போன்றவற்றை மாற்றிக் கொள்ளலாம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close