நத்திங் ஃபோன் 2 முதல் கேலக்ஸி இசட் ஃபோல்டு 5 வரை இந்தாண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் டாப் 5 ஸ்மார்ட் போன்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 5 (Galaxy Z Fold 5)
சாம்சங் தனது ஃபோல்டபுள் ஸ்மார்ட் போன்களிடையே தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளது, நிறுவனம் இப்போது அதன் அடுத்த ஃபிளாக்ஷிப் ஃபோல்டபுள் இசட் ஃபோல்டு 5- ஸ்மார்ட் போனை ஜூலை பிற்பகுதியில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது Galaxy Z Fold 4 போனில் இருந்து சில மாறுபாடுகளை பெற்றிருக்கும் என கூறப்படுகிறது.
அப்கிரேடேட் OLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 8 Gen 2 SoC மற்றும் மேம்படுத்தப்பட்ட அண்டர் டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா ஆகியவை இடம்பெறுகிறது.
கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 (Galaxy Z Flip 5)
Galaxy Z Flip 5 பெரிய கவர் டிஸ்பிளேயைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Fold 5 போலவே, Flip 5 ஆனது Snapdragon 8 Gen 2 SoC ஐ அடிப்படையாகக் கொண்டு இயக்கப்படும் என கூறப்படுகிறது. குறைந்தபட்சம் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட போனாக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நத்திங் ஃபோன் 2 (Nothing Phone (2))
போன் (2) என்பது மிகவும் எதிர்பார்க்கப்படும் மற்றொரு போன் ஆகும். Nothing Phone (2) ஆனது Snapdragon 8+ Gen 1 SoC மூலம் இயக்கப்படும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நத்திங் ஃபோன் 2 ஓஎஸ் (2) ஐ மூலம் செயல்படும் என்றும், பின்புறத்தில் மேம்படுத்தப்பட்ட கிளிஃப் லைட்டிங் பேக் செய்யும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் ஸ்மார்ட்ஃபோன் பின்புறத்தில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட டூயல் கேமரா அமைப்பை பேக் செய்யும் என்று ஊகிக்கப்படுகிறது.
மோட்டோரோலா Razr 40 சீரிஸ் (Motorola Razr 40 series)
இந்தியாவில் Razr 40 மற்றும் Razr 40 Ultra ஐ அறிமுகப்படுத்தப்படும் என மோட்டோரோலா உறுதிப்படுத்தியுள்ளது. இது அமேசானில் பிரத்தியேகமாக கிடைக்கும். மோட்டோரோலாவும் ஃபோல்டபுள் ஸ்மார்ட் போன்களாக அறிமுகப்படுத்துகிறது.
விலையுயர்ந்த Razr 40 Ultra ஆனது ஃபிளிப்-ஸ்டைல் மடிக்கக்கூடிய மிகப்பெரிய 3.6-இன்ச் pOLED கவர் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, மேலும் இது உலகின் மிக மெல்லிய ஃபிளிப் ஃபோன் என்றும் கூறப்படுகிறது.
iQOO நியோ 7 ப்ரோ (iQOO Neo 7 Pro)
iQOO நியோ 7 ப்ரோ ஜூலை 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுவதை உறுதி செய்துள்ளது. நிறுவனத்தின் படி, நியோ 7 ப்ரோ ஒரு டூயல்-சிப் ஃபோன் ஆகும், இதில் ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 SoC மற்றும் ஒரு இன்டிபெண்டன்ட் கேமிங் சிப் உள்ளது.
ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஃபோன் ஆரஞ்சு நிற ஃபாக்ஸ் லெதர் பேனலைக் கொண்டிருக்கும் மற்றும் FunTouchOS இல் இயங்கும். iQOO Neo 7 Snapdragon 8+ Gen 1 SoC-அடிப்படையிலான போன்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.