தீபாவளி பண்டிகை நெருங்கும் வேலையில், ஸ்மார்ட்போன் வாங்க விரும்ப நினைத்தால் தற்சமயத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆன்லைன் வணிகதளங்களான பிளிப்கார்டு, அமேசான் தள்ளுபடி விற்பனையை அவ்வப்போது அறிவித்து வருகின்னறன. அதில், டிஸ்கவுண்ட், கேஷ்-பேக், நோ-காஸ்ட் இ.எம்.ஐ என பல்வேறு சிறம்பம்சங்களையும் அந்நிறுவனங்கள் அறிவித்து, வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றன.இந்த நிலையில், ஸ்மார்போனை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு, ரூ.15000-க்கும் குறைவான விலையில் உள்ள ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கலாம் வாருங்கள்.
சியோமி ரெட்மி நோட் 4 (Xiaomi Redmi Note 4 )
சியோமி நோட் 4 சிறந்த ஆஃபர்களை பிளிப்கார்டு வழங்குகிறது. இந்தியவில் அதிக சேல்ஸ் ஆகும் சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன், 4,100mAH என்ற அதிக பேட்டரி திறனை கொண்டிருக்கிறது. இதனால், ஒருமுறை சார்ச் செய்தால் நீண்ட நேரம் உபயேகப்படுத்த முடியம். கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரெட்மி நோட் 4, ஸ்னாப்ட்ராகன் 625 பிராசஸரை கொண்டுள்ளது. மெட்டல் யுனிபாடி டிசைன், ஃபிண்கர் ப்ரிண்ட் ஸ்கேனர் ஆகியவற்றை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 4 ஜி.பி ரேம் கொண்டுள்ளது.
4ஜி.பி ரேம் 64 ஜி.பி ரோம் கொண்ட சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999 என்ற நிலையில், பிளிப்கார்டில் ரூ.10,999 தள்ளுபடி விற்னையில் உள்ளது.
ஹானர் 6எக்ஸ் (Honor 6X)
போட்டோ பிரியர்களுக்கு இந்த ஹானர் 6 எக்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் ரூ.12,999 என்ற விலையில் டுயல் ரியல் கேமராவை கொண்டிருக்கிறது இந்த ஹானர் 6எக்ஸ்.
ஹானர் 6 எக்ஸ்-ன் பெர்பார்மஸை பொறுத்தவரையில், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது. 3,340mAh பேட்டரி திறனுன் மற்றும் Kirin 655 பிராசஸரை கொண்டிருக்கிறது. 3 ஜி.பி/4 ஜி.பி ரேம் மற்றும் 32ஜி.பி/6 ஜி.பி ஸ்டோரேஜ் என இரு வகைகளில் வெளிவருகிறது. 64 ஜி.பி ஸ்டோரேஜை கொண்ட ஹானர் 6எக்ஸ் ரூ.12,999 என்றும், 32 ஜி.பி கொண்ட ஹானர் 6எக்ஸ் ரூ.10,999 என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எல்.ஜி க்யூ6 (LG Q6)
ஃபுல் விஷன் டிஸ்பிளே மீது கொஞ்சம் ஆர்வம் இருக்குதா? அப்படி இருந்தால் எல்.ஜி கியூ6, குறைந்த பட்ஜெட்டில் ரைட் சாய்ஸாக இருக்கும். எல்.ஜி க்யூ6 ஸ்மார்ட்போன் ரூ.14,990 என்ற விலையில் விற்பனையில் உள்ளது. எனினும், அமேசான் தள்ளுடி விற்பனை நாட்களில் ரூ.12,990 என்ற மலிவான விலையில் எல்.ஜி. கியூ6 ஸ்மார்ட்போனை வாங்கிக் கொள்ள முடியும்.
5.5 இன்ச் ஃபுல்விஷன் ஸ்கிரீனை கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில், ஸ்கிரினில் ஸ்க்ராட் விழுந்தால் கவலைப்பட வேண்டியதில்லை. எல்.ஜி நிறுவனம் முதல் 6 மாதங்களுக்குள் இலவசமாக அதனை மாற்றிக் கொடுக்க முன்வந்துள்ளது. 3,000mAh என்ற பேட்டரி திறனை கொண்டுள்ள நிலையில், பேஸியல் ரெகக்னிஷன் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளன.
கூல்பேட் கூல் பிளே 6(Coolpad Cool Play 6)
டுயல் கேமரா சிறப்பம்சம் கொண்ட கூல்பேட் கூல் பிளே 6 ஸ்மார்ட்போனானது ரூ.14,999 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கேம் பிரியர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் 6 ஜி.பி ரேம் கொண்டிருக்கிறது இந்த கூட்பேட் கூல் பிளே 6. ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 653 ப்ராசஸருடன், 4,000mAh பேட்டரி திறனை கொண்டிருக்கிறது.
விலையுடன் ஒப்பிடுகையில், மற்ற ஸ்மார்ட்போன்களிளைப் போன்ற இதிலும் சிறப்பம்சங்கள் உள்ளன. 5.5 இன்ச் ஃபுல் எச்.டி டிஸ்பிளே, 13 எம்.பி+13 எம்.பி டுயல் ரியல் கேமரா, 8 எம்.பி செல்ஃபி கேமரா ஆகியவற்றை கொண்டிருக்கிறது. பிளிப்கார்டு, அமேசான் ஆகிய வணிக தளங்களில் இந்த கூல்பேட் கூல் பிளே 6(Coolpad Cool Play 6) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி விலை இருப்போது போல தெரியவில்லை. எனவே, இந்த போனை நீங்கள் ஒரு ஆப்ஷனாக வைத்துக் கொள்ளலாம்.
மோட்டோ ஜி5எஸ் பிளஸ்(Moto G5s Plus)
மிட்-பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் டுயல் ரியர் கேமரா என்பது தற்போது ட்ரெண்ட் ஆகிவிட்டது. எனவே, 15,999 என்ற விலையில் வெளிவரும் மோட்டோ ஜி5எஸ் பிளஸ்(Moto G5s Plus) ஸ்மார்ட்போனிலும், டுயல் ரியர் கேமரா உள்ளது. மோட்டோரோலா ஸ்மார்ட்போன் மட்டுமே வேண்டும் என நினைத்து, டிசைன் மற்றும் கேமராவில் அப்கிரேடு வேண்டும் என நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு மோட்டோ ஜி5எஸ் பிளஸ்(Moto G5s Plus) பெஸ்ட் சாய்ஸாக இருக்கும். 4 ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி ரோம், மெட்டல் யுனிபாடி டிசைன், 5.5 இன்ச் ஃபுல் எச்.டி ஸ்கிரீன், ஃபிண்கர் பிரிண்ட் சென்சார், ஸ்னாப்ட்ராகன் 625 ஆக்டா-கோர் பிராசஸரை கொண்டிருக்கிறது. கேமராவை பொறுத்தவரையில் 13 எம்.பி-13 எம்.பி டுயல் ரியல் கேமராவுடன், 8 எம்.பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
ரூ.15,999 என்ற விலை ஜாஸ்தியாக இருக்கிறது என்று நினைத்தால், ரூ.13,999 என்ற விலையில் உள்ள மோட்டோ ஜி5எஸ் வங்கிக் கொள்ளலாம். இரண்டு ஸ்மாட்போன்களின் சிறப்பம்சங்களும் கிட்டத்தட்ட ஒரே போல தான் இருக்கிறது. மோட்டோ ஜி5எஸ் 16 எம்.பி சிங்கிள் ரியர் கேமரா, 5 எம்.பி செல்ஃபி கேமரா தான் அவற்றிற்கிடையே இருக்கும் முக்கிய மாற்றமாகும்.
லெனோவோ கே8 நோட் (Lenovo K8 Note)
மிட்-ரேன்ஞ் ஸ்மார்ட்போன்களில் டீசன்ட்டான ஒன்று இந்த ரெனோவோ கே8 நோட். டுயல் ரியல் கேமரா வசதியுடன் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் 3ஜி.பி ரேம் + 32 ஜி.பி ரோம் மற்றும் 4 ஜி.பி ரேம் + 64 ஜி.பி ரோம் என்ற இரண்டு வகைகளில் வெளிவருகிறது. 3ஜி.பி ரேம் + 32 ஜி.பி கொண்ட ஸ்மார்ட்போன் ரூ12,999 என்ற விலையிலும், 4 ஜி.பி ரேம் + 64 ஜி.பி கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.11,999 என்றும் விற்பனை செய்யப்படும் நிலையில், அமேசானின் ஆஃபரில் அவற்றிற்கு ரூ.2000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த விலையில் வந்த லெனோவா ஸ்மார்ட்போனில், லெனோவோ கே8 நோட் (Lenovo K8 Note) ஒரு பெஸ்ட் போனாக இருக்கிறது.
5.5 இன்ச் டிஸ்பிளே, டென்-கோர் மீடியாடெக் ஹெலியோ எக்ஸ்23 ப்ராசஸர்(Ten-core MediaTek Helio-X23 processor), 13 எம்.பி +5 எம்.பி டுயல் ரியர் கேமரா மற்றும் 13 எம்.பி செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது. 4,000mAh பேட்டரி திறனை கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன், வார்டர் ரிபெல்லன்ட் கோட்டிங்கை கொண்டிருக்கிறது.
சியோமி எம்.ஐ ஏ1 (Xiaomi Mi A1)
சியோமி எம்.ஐ ஏ1 ஸ்மார்ட்போனாது, கூகிள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு ஒன் ப்ராஜெக்டுன் இணைந்து தயாரிக்கப்படும் அந்நிறுவனத்தின் முதல் ஸமார்ட்போனாகும். டுயல் கேமரா சிறம்பம்சத்திற்கு அடுத்ததாக, பயனர்கள் ஆண்ட்ராய்டின் சிறப்பம்சங்களை இதில் விரைவில் பெற முடியுமாம். எம் ஏ1 ஸ்மார்ட்போனின் ஹைலைட்ஸ் என்னசென்று கேட்டால், இந்த ஆண்டின் இறுதியில் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்ஸ் கிடைக்குமாம். பின்னர், இனி வரும் ஆண்ட்ராய்டு பி அப்டேட்ஸும் வழங்கப்படும் என்பது தான்.
ரூ.14,999 என்ற விலையில் விற்பனையாகும் இந்த ஸ்மார்ட்போன், 4 ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி ஸ்டோரேஜை கொண்டிருக்கிறது. சியோமி எம்.ஐ ஏ1 (Xiaomi Mi A1) ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்டில் எக்ஸ்சேன்ஸ் ஆஃபரும் உள்ளது. சியோமி நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடுகளில் ஒன்றான இந்த ஸ்மார்ட்போன் 12 எம்.பி + 12 எம்.பி என்ற டுயல் ரியர் கேமரா சிறப்பம்சத்தை கொண்டிருக்கிறது. சியோமி எம்.ஐ ஏ1 (Xiaomi Mi A1) 5.5 இன்ச் ஃபுல் எச்.டி ரிசொலூசன் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 ப்ராசஸர், 5 எம்.பி செல்ஃபி கேமரா ஆகியவற்றை கொண்டிருக்கிறது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook
Web Title:Top mid range mobiles under rs 15000 for diwali 2017 redmi note 4 moto g5s plus and more
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்