யுனிஃபைடு பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) யு.பி.ஐ மூலம் மற்றவர்களுக்கு பணம் அனுப்பும் வசதியை கொண்டு இரு வங்கி கணக்குகளிடையே உடனுக்குடன் பண பரிமாற்றம் மேற்கொள்ள முடியும் என்பது பேமென்ட் பேங்கின் சிறப்பு. பாதுகாப்பு நிறைந்த இந்த பேமென்ட் பேங்க் வசதியானது தற்போது ட்ரெண்ட்டாகி வருகிறது.
ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு சாதாரணமாக பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றால், அதற்கு சில மணி நேரமாகும். அவ்வாறு பணப்பரிவர்தனை செய்வத்ற்கு வங்கி கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர், ஐ.எஃப்.எஸ்.சி கோடு ஆகியவை அவசியமானது. பெரும்பாலான வங்கிகளில், beneficiary ரிஜிஸ்டர் செய்திருந்தால் தான் பணபரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். ஆனால், யு.பி.ஐ என்பது மிகவும் எளிதானது என்பது கவனிக்கத்தக்கது. வங்கிகளில் இல்லாதவற்றை கூட இந்த பேமென்ட் பேங்க் வழங்குகின்றன. உதாணரமாக, பேமென்ட் பேங்கை பொறுத்தவரையில் எந்தவித மினிமம் பேலன்ஸும் வைத்திருக்க வேண்டிய கட்டாம் இல்லை. அதோடு, டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதமும் அதிகமாகும். மேலும், பயனர்கள் ஆன்லைன் டெபிட் கார்டு மூலமாக, பணப்பரித்தனை மேற்கொள்ள முடியும்.
பேமென்ட் பேங்க் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதற்கு, அதன் வளர்சியையே உதாரணமாக கூறலாம். இந்தியாவின் முதன்முதலாக ஏர்டெல் பேமென்ட் பேங்க் தான் அறிமுகம் செய்யப்பட்டது. 2016-17 நிதியாண்டில் ஏர்டெல் பேமெட் போங்க் ரூ.67.33 கோடி டெபாசிட் தொகையான முதல் ஆண்டிலேயே பெற்றது. எனினும், உங்களது பணம் பாதுகாப்பாக இருக்குமா என்ற கேள்விக்கு? எஸ் என்றே பதிலும் கிடைக்கிறது.
மற்ற வங்கிகளில் செலுத்தப்படும் பணம் எவ்வளவு பாதுகாப்பான முறையில் உள்ளதோ, அதே போன்று தான் ஏர்டெல் பேமென்ட் பேங்கிலும் பாதுகாப்பானதாக இருக்கும். ஏர்டெல் பேமென்ட் உங்களுக்கு உண்டுமானால், 3 நிமிடத்தில் தொடங்கிவிட முடியும். இதற்காக ஆதார் கார்டும், ரூ.100 இருந்தால் போதுமானதாகும். குறிப்பிடும்படியாக, ஏர்டெல் பேமென்ட் பேங்க் சேமிப்பு கணக்கிற்கு 7.25 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. ரூ.1 லட்ச விபத்து காப்பீடும் இலவசமாக கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.