பைக் ரேஸ்க்கு தயாரா? சவாலுக்கு அழைக்கிறது டி.வி.எஸ் நிறுவனம்!

TVS Racing MotoSoul 2019 : டி.வி.எஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் இந்த போட்டிகள் குறித்த தகவல்களும், பரிசு தொகை குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன.

TVS Racing MotoSoul 2019 : டி.வி.எஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் இந்த போட்டிகள் குறித்த தகவல்களும், பரிசு தொகை குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன.

author-image
Nithya Pandian
புதுப்பிக்கப்பட்டது
New Update
TVS Racing MotoSoul 2019 bike race event, TVS Racing MotoSoul 2019

TVS Racing MotoSoul 2019

TVS Racing MotoSoul 2019 bike race event : இந்த வருடம் அக்டோபர் மாதம் 18 மற்றும் 19 தேதிகள் டி.வி.எஸ் நிறுவனத்தின் ரேசிங் மோட்டோசோல் TVS Racing MotoSoul என்ற பெயரில் பிரம்மாண்டமான ரேஸ் பந்தயங்கள் நடைபெற உள்ளது. டி.வி.எஸ். வண்டிகளை வைத்திருப்பவர்கள் மட்டுமல்லாமல் எந்த விதமான இரு சக்கர வாகனங்களை வைத்திருப்பவர்களும் இதில் பங்கேற்கலாம். கோவா மாநிலத்தில் உள்ள வகேட்டர் என்ற இடத்தில் TVS Racing MotoSoul 2019 நடைபெற உள்ளது.

TVS Racing MotoSoul 2019 bike race event - என்னென்ன நடைபெற உள்ளது?

Advertisment

அக்சலரேட், ஷிஃப்ட், மற்றும் ப்ரேக் என 3 விதமான நிகழ்வுகளை இந்த மோட்டோசோலில் நடத்த உள்ளது.  டி.வி.எஸ் மோட்டார் வாகனங்களை பயன்படுத்தி சர்வதேச ரேஸ் பந்தயங்களில் வெற்றி பெற்ற வீரர்களான மைக்கேல் மெட்ஜ் (பாஜா அரகோன் சாம்பியன்) மற்றும் அரவிந்த் கே.பி. ஆகியோருடன் நீங்கள் உரையாடும் வாய்ப்பினையும் உருவாக்கியுள்ளது டி.வி.எஸ். நிறுவனம்.

செர்கோ - டி.வி.எஸ் தொடர் பந்தயங்களில் பங்கேற்று டி.வி.எஸ்க்கு வெற்றியை பெற்றுத் தந்த 2 சக்கர வாகனங்கள் இங்கு பார்வைக்கு வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

36 வருடங்களுக்கும் மேலாக பந்தய போட்டிகளில் தன்னை ஈடுபடுத்தி வரும் டி.வி.எஸ். நிறுவனத்தின் இது போன்ற ஒரு 'மீட்’ பைக் வெறியர்களுக்கு ஒரு கொண்டாட்ட பொழுதாகவே இருக்கக்கூடும். இரண்டு நாள் நிகழ்வில் மோட்டோகிராஸ் ரைடிங், ஸ்டண்ட் ஷோ நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து காலா நைட் ( gala night) நடைபெற உள்ளது.

Advertisment
Advertisements

இந்த நிமிடம் வரையில் பங்கேற்பதற்கான விண்ணப்பத் தொகை குறித்து டி.வி.எஸ். எதுவும் அறிவிக்கவில்லை. அறிவிக்கும் பட்சத்தில் நாங்கள் உங்களுக்கு விரைவில் அந்த அப்டேட்டினை தருகின்றோம்.

மேலும் படிக்க : எலெக்ட்ரிக் காரின் பீஸ்ட் இது தான்… 2000PS பவரில் இயங்கும் ஹைப்பர்கார் ஒரு பார்வை

என்னென்ன ரேஸ்கள் நடைபெற உள்ளது?

Accelerate என்ற நிகழ்வின் கீழ் அப்பாச்சே ப்ரோ பெர்ஃபார்மென்ஸ் (Apache Pro Performance), டர்ட் ட்ராக் (Dirt track), ஸ்லோ ரேஸ்(Slow race), அப்ஸ்டெக்கல் ரேஸ் (obstacle race), மோட்டோக்ராஸ் ஃபிட் (motocross fit) போன்ற பெயரில் தனித்தனியாக ரேஸ் நடைபெற உள்ளது. டி.வி.எஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் இந்த போட்டிகள் குறித்த தகவல்களும், பரிசு தொகை குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன.

Automobile

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: