ட்விட்டர் தளத்தில் 140 என்ற கேரக்டர் வரம்பை இரட்டிப்பாக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்து, அதற்கான சோதனையை தொடங்கியுள்ளது. மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரில் 140 கேரக்டரில் மட்டுமே பதிவிட முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில், பதிவுகளில் 140 கேரக்டர் வரம்பில் இருந்து 280 கேரக்டராக மாற்ற அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான சோதனையையும் ட்விட்டர் மேற்கொண்டு வருகிறது.
140 கேரக்டர் வரம்பு என்பது ட்விட்டர் வாசிகளை ஏமாற்றமடைய செய்வதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளதாகவும், இதன்காரணமாகவே 140 கேரக்டர் வரம்பை இரட்டிப்பாக ட்விட்டர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக குறைந்தபட்ச அளவிலான ட்விட்டர் பயனர்களுக்கு, 280 கேரக்டர் வசதி சோதனை முறையில் வழங்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் அறிவித்துள்ளது.
இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் தலைமை நிர்வாகி ஜேக் டோர்சே கூறியுள்ளதாவது: இது சிறிய மாற்றம் தான் என்ற போதிலும், ட்விட்டரின் அடுத்தக்கட்ட நகர்வாக இருக்கும் என கருதுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.