/tamil-ie/media/media_files/uploads/2017/11/twitter-280-750.jpg)
பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் இனி 280 எழுத்துகள்(கேரக்டர்) வரை பதிவிடும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 140 எழுத்துகள் வரை மட்டுமே பதிவிட முடியும் என்ற நிலையில், அதனை தற்போது இரட்டிப்பாக்கி உள்ளது ட்விட்டர்.
ட்விட்டரை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. காரணம் என்னவென்றால், பெரும்பாலான பிரபலங்கள் ட்விட்டர் மூலமாக உடனடி அப்டேட்ஸ் கொடுப்பது தான். முன்னதாக ட்விட்டரில் பதிவிட வேண்டும் என்றால் 140 எழுத்துகளுக்கள் மட்டுமே பதிவிட சாத்தியம் என்ற நிலை இருந்து வந்தது. இதன் காரணமாக சின்னஞ் சிறிய வாக்கியத்திற்குள்ளாகவே சொல்லவேண்டியதை நச்சென்று சொல்ல வேண்டியது இருந்தது.
மேலும், சிறிய வாக்கியத்திற்குள் அனைத்தையும் சொல்வது என்பது கடினமான விஷயமாகவும் இருந்து வந்தது. இந்த நிலையில், 140 எழுத்துகள் என்ற வசதியை தற்போது இரட்டிப்பாக்கியுள்ள ட்விட்டர் நிறுவனம், 280 எழுத்துக்கள் வரை பதிவு செய்யும் வகையில் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியானது முன்னதாகவே சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வந்தது என்றபோதிலும், தற்போது தான் அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ஆனாலும், சீன மொழி, ஜப்பான் மொழி, கொரிய மொழி ஆகியவற்றிற்கு முன்னதாக வழங்கப்பட்ட வசதியே உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதியின் மூலமாக, பெரும்பாலான பயனர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.