இந்தியர்களின் தரவுகள் சீனாவில் கசியவிடப்பட்டதா? யூ.சி புரவுசர் விளக்கம்

சீன நிறுவனமான அலிபாபாவின் யூ.சி பிரவுசர் இந்தியாவில் அதிகம் டவுண்லோடு செய்யப்படும் பிரவுசர்களில் முன்னியில் உள்ளது. பயனர்களின் தரவுகள் கசியவில்லை.

ஊடகங்களில் வெளியான தகவல் போல தரவுகள் எதுவும் கசியவிடப்படவில்லை என யூ.சி வெப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சீன நிறுவனமான அலிபாபாவின் யூ.சி பிரவுசர் இந்தியாவில், அதிகம் டவுண்லோடு செய்யப்படும் பிரவுசர்களில் முன்னியில் உள்ளது. இந்தியாவில் ஆண்ட்ராய்டு போன்களில் அதிகமாக டவுண்லோடு செய்யப்படும் ஆப்ஸ்-ல் இந்த யூ.சி பிரவுசர் 6-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 10 கோடி பேர் இந்த யூ.சி பிரவுசரை மாதந்தோறும் பயன்படுத்தி வருகிறார்களாம்.

இந்த யூ.சி பிரவுசரானது இந்திய பயன்பாட்டாளர்களின் ஐ.எம்.இ.ஐ நம்பர் மற்றும் இருப்பிடம் போன்ற தரவுகளை சீனாவில் கசியவிட்டுள்ளது என்றும், அதுபோன்ற குற்றச்சாட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டால், யூ.சி பிரவுசர் இந்தியாவில் தடை செய்யப்படலாம் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

டோக்லாம் பிரச்சனையில், எல்லையில், இந்தியா-சீனா இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியர்களின் தரவுகள் சீனாவில் கசிந்ததாக புகார் எழுந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஊடகங்களில் வெளியான தகவல் போல தரவுகள்  கசியவில்லை  என யூ.சி வெப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து யூ.சி வெப் கூறியதாவது: பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தனிபட்ட விஷயங்களை கையாள்ளுதல் போன்றவற்றில் நாங்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இது தொடர்பாக இந்திய அரசிடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் எங்களுக்கு வரவில்லை.பொதுவாக ஐ.டி கம்பெனிகளை பொறுத்தவரை உலகின் பல்வேறு பகுதிகளிலும் செல்வர்களை நிறுவி, பயனர்களின் தரவுகளை சேமித்து வைப்பது என்பது வழக்கமான ஒன்றுதான். அதனால், பயனர்களின் தரவுகள் மிகப் பாதுகாப்பு அம்சத்துடனே நாங்கள் பறிமாற்றம் செய்கிறோம் என்று தெரிவித்துள்ளளது.

முன்னதாக, கடந்த மே மாதம் கனடாவின் டெக்னாலஜி ரிசர்ஜ் குழுவான “சிட்டிசன் லேப்” தகவல் ஒன்றை வெளியிட்டது. அதில், யூ.சி வெப் பயனர்களின் முக்கிய தகவல்களான இருப்பிடம், தேடல் செய்த விபரங்கள், மொபைல் நெட்வொர்க் மற்றும் டிவைஸ் நம்பர் ஆகியவற்றை மற்ற நிறுவனங்களிடம் பகிர்ந்து கொள்ளப்படுவதாக தெரிவித்தது. இது தான் இந்த விவகாரத்தில் தற்போது முக்கிய பிரச்சனையாக எழுந்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close