scorecardresearch

வி.ஐ-யின் 2 புதிய அசத்தல் ரீசார்ஜ் திட்டங்கள்: அதிக வேலிடிட்டி; சன் நெக்ஸ்ட், சோனி லிவ் இலவசம்

வோடபோன் ஐடியா ரூ.368, ரூ.369 என 1 ரூபாய் வித்தியாசத்தில் 2 புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

Vodafone Idea
Vodafone Idea (Vi)

வோடபோன் ஐடியா இந்தியாவில் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவை வழங்கினாலும் வோடபோன் இன்னும் 5ஜி சேவையை வழங்கவில்லை. இருப்பினும் 4ஜியில் பல்வேறு திட்டங்களை வழங்குகிறது. அந்த வகையில், தற்போது புதிதாக 2 புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுவும் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ரூ.368, ரூ.369 என 1 ரூபாய் வித்தியாசத்தில் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 2 திட்டங்களிலும் உள்ள வித்தியாசம் என்ன, பலன்கள் என்ன என்பது குறித்து பார்ப்போம்.

வி.ஐ ரூ.368 திட்டம்

Vi வழங்கும் ரூ.368 ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்கள் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவுடன் 30 நாட்களுக்கு 60ஜிபி டேட்டாவை பெறுவர். அன்லிமிடெட் காலிங், ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் (SunNxt) சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. அதோடு வி.ஐ மூவிஸ், டிவி சந்தா மற்றும் 2GB பேக்அப் டேட்டா வழங்கப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த திட்டத்தில் Binge All Night சலுகையாக இரவு நேரத்தில் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை அன்லிமிடெட் டேட்டா இலவமாக வழங்கப்டுகிறது. இந்த வசதியைப் பெற பயனர்கள் 121249 என எண்ணிற்கு அழைக்க வேண்டும்.

வி.ஐ ரூ.369 திட்டம்

Vodafone Idea ரூ.369 திட்டத்தில் அதே பயன்கள் அன்லிமிடெட் காலிங், ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ், Binge All Night சலுகை ஆகியவை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சோனி லிவ் (SonyLiv) சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. வி.ஐ மூவிஸ், டிவி சந்தா மற்றும் 2GB பேக்அப் டேட்டா உள்ளது. அந்த திட்டம் போல் இதுவும் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. ரூ.368 மற்றும் ரூ.369 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ள ஒரே பெரிய வித்தியாசம் ரூ.368 திட்டத்தில் சன் நெக்ஸ்ட், ரூ.369 திட்டத்தில் சோனி லிவ் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இது மட்டும் தான் 2 திட்டத்திலும் உள்ள வித்தியாசம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Vi launches new plans worth at rs 368 and rs 369 with data and ott benefits

Best of Express