Advertisment

வி.ஆர் வீடியோ கேமில் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்: பகீர் சம்பவம்; போலீசார் விசாரணை

மெட்டாவெர்ஸ் வழங்கும் மெய்நிகர் (Virtual Reality) வீடியோ கேமில் கலந்து கொண்ட இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமி சக ஆன்லைன் அவதார்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.

author-image
sangavi ramasamy
New Update
 Metaverse.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மெய்நிகர் விளையாட்டில், சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டதன் பேரில் மெட்டாவெர்ஸ், பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கொள்கையை அடிப்படையாக கொண்டு பலகட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சிறுமி புகார் தொடர்பாக இங்கிலாந்து (UK) போலீஸ் ஏற்கனவே வழங்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.  டெய்லிமெயில் பத்திரிகையில் இந்த செய்தி முதல் முதலில் வெளியிட்டப்பட்டது.  அதில், 16 வயது சிறுமியின் (மைனர்) மெய்நிகர் அவதார், சக  

ஆன்லைன் அவதார்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. 

Advertisment

இந்த சம்பவம் ஒரு மெய்நிகர் வீடியோ கேமில் நடந்தது. மெட்டாவெர்ஸ் வீடியோ கேமில் விளையாடும் போது பயனர்கள் மற்ற  பிளேயர்களுடன் தொடர்பு கொள்ள VR ஹெட்செட்டை அணிய வேண்டும். அதாவது 

உண்மையான மனிதனுக்கு டிஜிட்டல் அவதாரங்களை மெய்நிகர் மூலம் அது வழங்கும். 

மெட்டாவெர்ஸில் விளையாடும் போது அந்த சிறுமி முதலில் தாக்கப்பட்டுள்ளார். எனினும் physical contact எதுவும் இல்லை என்பதால் அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

எனினும்  போலீசார் அறிக்கையில், சிறுமி மன ரீதியாகவும், உளவியல் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மெட்டாவெர்ஸ் இலவசமாக வழங்கும் மேலும் பல கேம்கள்  ஹொரைசன் வேர்ல்ட்ஸ், ஹொரைசன் வென்யூஸ், மெட்டாவின் கேம்கள் போன்றவற்றிலும் இது போன்ற சம்பவங்கள் புகார் பதியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.  

மெட்டாவெர்ஸில் பாலியல் துஷ்பிரயோகம் மட்டுமல்ல, மெய்நிகர் கொள்ளை, அடையாள திருட்டு மற்றும் தாக்குதல்கள் பற்றிய பல புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. 

மெட்டாவெர்ஸ் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான மெட்டாவின் ஒரு பிரிவு  நிறுவனமாகும். இச்சம்பவம் குறித்து மெட்டா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 'இது போன்ற செயல்களுக்கு எங்கள் தளத்தில்   இடமில்லை. எனினும் எல்லா பயனர்களுக்கும்  தனிப்பட்ட எல்லை (personal boundary) எனப்படும் தானியங்கி பாதுகாப்பு அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இது உங்களுக்குத் தெரியாதவர்களை உங்களிடமிருந்து சில அடி தூரத்தில் வைத்திருக்கும்' என்று கூறினார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Metaverse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment