விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரிவ்யூ

மோட்டரைஸ்ட் செல்பி கேமரா மூலம் மிகவும் துல்லியமான அழகான புகைப்படங்களை எடுக்க உதவும் ஸ்மார்ட்போன் இது

இந்தியாவிற்கு புதுவரவாகியிருக்கும் விவோ நெக்ஸ் ஸ்மார்ட் போன் நோட்ச் இல்லாத ஃபுல் ஸ்கிரீன் டிஸ்பிளேவுடன் வருகிறது.

நோட்ச் டிசனை விரும்பாத வாடிக்கையாளர்களுக்கென தனியாக தயாரிக்கப்பட்ட இந்த போனில் செல்பி எடுப்பதற்கான மோட்டரைஸ்ட் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சார், பிசோஎலக்ட்ரிக் ஸ்பீக்கர் என்று பல சிறப்பம்சங்களுடன் ஸ்போர்ட்ஸ் மாடலாக வெளிவந்திருக்கும் இந்த போனை க்ளாஸ் மெட்டிரியல் கொண்டு வடிவமைத்திருக்கிறார்கள்.

Vivo Nex Review

Vivo Nex Review

விவோ நெக்ஸ் சிறப்பம்சங்கள்

  1. 6.59 அங்குலம் கொண்ட ஃபுல் எச்.டி திரையுடன் வருகிறது.
  2. SAMOLED திரை 19.3:9 என்ற ஃபார்மட்டுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
  3. க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 845 ப்ரோசஸ்ஸரில் இயங்கும் இந்த போனின் ரேம் மெமரி 8ஜிபி ஆகும். இண்டர்நெல் ஸ்டோரேஜ் 128ஜிபி ஆகும்.
  4. 4000mAh திறன் கொண்ட பேட்டரியுடன் வருகிறது இந்த போன்.
  5. ஆண்ட்ராய்ட் ஓரியோ இயங்கு தளத்தில் இயங்குகிறது விவோ நெக்ஸ்.

விலை: ரூ. 44,990

போனின் நிறைகுறைகளை கணக்கிடும் போது, விவோ நெக்ஸ்ஸின் எடை 199 கிராம் என்பது கொஞ்சம் கூடுதலானது. எடை அதிகமானதிற்கு இதனுடைய 6.59 திரையும் பெரிய பேட்டரியும் தான் காரணம்.

இந்த போனின் இடது பக்கம் கூகுள் அசிஸ்டெண்ட்டினை இயக்குவதற்கான பட்டன் உள்ளது. வலது புறத்தில் வால்யூம் பட்டன்கள் மற்றும் பவர் பட்டன் உள்ளது.

Vivo Nex Shots

Vivo Nex Shots

கேமராக்கள் மற்றும் செல்பி மோட்கள்

போனின் பின்பக்க கேமரா மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. 12 எம்பி மற்றும் 5 எம்பி என இரண்டு பின்பக்க கேமராக்களைக் கொண்டுள்ளது.

போர்ட்ரைட் மோட் மூலமாக எடுக்கப்படும் இந்த போட்டக்கள் மிகவும் துல்லியமாக இருக்கிறது.

மோட்டரைஸ்ட் செல்பி கேமராவில் எடுக்கப்படும் புகைப்படங்களும் மிகவும் துல்லியமாகவும், பல்வேறு மோட் ஆப்சன்களுடனும் வருகின்றன.

பேட்டரி

முழுதாக ஒன்றரை நாட்களுக்கு தாக்குப்பிடிக்கிறது இந்த போனின் 4000mAh திறன் கொண்ட பேட்டரி.

20%ல் இருந்து 100%மாக சார்ஜ் ஆவதற்கு இது வெறும் ஒன்றரை மணி நேரங்களே ஆகிறது.

Vivo Nex

Vivo Nex

குறைகள்

யூஸர் இண்டெர்ஃபேஸ் குழப்பமாக இருக்கிறது 128 ஜிபி இண்டர்நெல் ஸ்டோரேஜ் இருப்பதாலோ என்னவோ மெமரி கார்ட் போடுவதற்கான ஸ்லாட்டினை தரவில்லை. புகைப்படம் எடுப்பதற்கான மோட்கள் அனைத்தும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கின்றது. புகைப்படத்தில் தோன்றும் நிறங்கள், நிஜ காட்சியினை விட சற்று அதிகப்படியாக இருக்கிறது.

இதன் விலைக்கு ஒன்ப்ளஸ் 6 போனின் 8ஜிபி RAM மற்றும் 128ஜிபி RAM வகை போன்கள் சிறப்பான தேர்வு என்று தான் கூற இயலும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close