விவோ Y69 செல்ஃபோன் வாங்க திட்டமிருக்கீங்களா? அதன் சிறப்பம்சங்களைப் படிச்சுட்டு போங்க

விவோ நிறுவனம், தங்களுடைய புதிய ஸ்மார்ட்ஃபோன் விவோ Y69 மாடல் செல்ஃபோனை வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தது. செல்ஃபி அம்சம்தான் இந்த மாடலின் சிறப்பம்சம்.

விவோ நிறுவனம், தங்களுடைய புதிய ஸ்மார்ட்ஃபோன் விவோ Y69 மாடல் செல்ஃபோனை வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தது. அந்நிறுவனத்தின் மற்ற செல்ஃபோன்களைப் போலவே செல்ஃபி அம்சம்தான் இந்த மாடலின் சிறப்பம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை 14,990 ரூபாய். சாம்சங் S5K3P3ST சென்சாருடன் கூடிய 16 மெகா பிக்சல் கொண்டது இந்த செல்ஃபோனின் ஃப்ரண்ட் கேமரா, f/2.0 அபெர்ச்சர் ஆகியவை இதன் சிறப்பம்சங்களில் சில. 5.5 இன்ச் எச்.டி. (720*1280) டிஸ்பிளே, ஆண்ட்ராய்ட் 7.0 நொகட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த விவோ Y69 செல்ஃபோன் உருவாக்கப்பட்டுள்ளது. கொரில்லா க்ளாஸ் 3 பாதுகாப்பும் இந்த செல்ஃபோனுக்கு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த செல்ஃபோனின் ஃப்ரண்ட் கேமராவில் மூன்லைட் க்ளோ லைட் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. செல்ஃபி, லைவ் புகைப்படம் உள்ளிட்டவற்றை அழகாக எடுக்க இந்த தொழில்நுட்பம் துணைபுரியும்.

இதன் ப்ராசசர் 1.5 ஜிகா ஹெர்ட்ஸ், 3 ஜி.பி. RAM ஆகியவற்றைக் கொண்டது.

இந்த செல்ஃபோனின் பின்பக்க கேமரா 13 மெகா பிக்சல், சாம்சங் S5K3L8, டூவல் லெட் ஃபாளாஷ், f/2.2 அபெர்ச்சரைக் கொண்டது.

இதன் உள் மெமரி 32 ஜி.பி. கொண்டது. மெமரி கார்டு மூலம் 256 ஜி.பி. வரை மெமரி சேமிக்க முடியும். 4G Volte, வை-ஃபை 802.11 a/b/g/n, v.4.2, 3.5 mm ஆடியோ ஜால்,மைக்ரோ யு.எஸ்.பி. ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்த செல்ஃபோன் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஃபிளிப்கார்டு, அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக தளங்களில் இந்த செல்ஃபோனை வாங்கலாம். சையோமி ரெட்மி நோட் 4 மற்றும் மோட்டோ ஜி5 ப்ளஸ் ஆகிய செல்ஃபோன்களுக்கு இந்த விவோ y69 கடினமான போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

×Close
×Close