scorecardresearch

வி.ஐ-யின் காதலர் தினப் பரிசு: ரூ. 5,000 மதிப்புள்ள வவுச்சர், 5 ஜிபி இலவச டேட்டா.. இதை மட்டும் செய்யுங்க!

Vodafone-Idea’s (Vi) Valentine’s Day offers: வோடபோன்- ஐடியா காதலர் தின சிறப்பு ஆஃபராக குறிப்பிட்ட சில ப்ரீபெய்ட் ரிசார்ஜ் திட்டத்திற்கு 5 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது.

வி.ஐ-யின் காதலர் தினப் பரிசு: ரூ. 5,000 மதிப்புள்ள வவுச்சர், 5 ஜிபி இலவச டேட்டா.. இதை மட்டும் செய்யுங்க!

வோடபோன்- ஐடியா (Vi) முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியா முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. இந்நிலையில் இளைஞர்களை கவரும் விதமாக காதலர் தினத்தை முன்னிட்டு நிறுவனம் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி குறிப்பிட்ட சில ப்ரீபெய்ட் ரிசார்ஜ் திட்டத்திற்கு 5 ஜிபி டேட்டா இலவசமாகவும், வி. ஐ லவ் ட்யூன் போட்டியில் வெல்பவர்களுக்கு ரூ.5,000 மதிப்புள்ள வவுச்சர் வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

காதலர் தின சிறப்பு ஆஃபர் என்ன?

காதலர் தின சிறப்பு ஆஃபராக ரூ.299 மற்றும் அதற்கு மேல் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 5 ஜிபி கூடுதல் டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் எவ்வித கூடுதல் கட்டணமும் இல்லாமல் வழங்கப்படுகிறது. ரூ.199 தொடங்கி ரூ.299 வரையிலான குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டங்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டியுடன் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சலுகை பிப்ரவரி 14, 2023 வரை Vi செயலி மூலம் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 5000 கூப்பன்

வி. ஐ லவ் ட்யூன் போட்டியில் கலந்து கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 5,000 மதிப்பிலான கூப்பன் பரிசாக வழங்கப்படும். இந்த கூப்பன் பெற Vi App மூலம் ஹங்காமா மியூசிக்கில் உள்ள Valentine playlist செல்ல வேண்டும். அங்கு ஒரு பாடலின் வரிகள் வரிசையாக இல்லாமல் மாற்றி மாற்றி (jumbled lyrics) கொடுக்கப்பட்டிருக்கும். அதை கண்டுபிடித்து சரியான பாடலை தெரிவிக்க வேண்டும்.

பங்கேற்பாளர்கள் சரியான பதிலை #ViLoveTunes என்ற ஹேஷ்டேக்குடன் தெரிவிக்க வேண்டும். இந்த போட்டி இன்று முதல் ஆரம்பமாகி விட்டது. Vi இன் சமூகவலைதளப் பக்கங்களான இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கேள்விக்கும் பரிசு வழங்கப்படுகிறது. தினமும் பரிசு வழங்கப்படுகிறது. சரியான பதிலைத் தெரிவிக்கும் நபருக்கு ரூ. 5,000 மதிப்புள்ள கிப்ட் வவுச்சர் வழங்கப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Vodafone ideas vi valentines day offers get up to rs 5gb extra data

Best of Express