ரூ.244-க்கு 70 ஜி.பி டேட்டா... வோடபோஃன் அதிரடி ஆஃபர்!

சமீபத்தில், ஜியோவிற்கு போட்டியாக வோடபோஃன் நிறுவனம் “சூப்பர் டே” மற்றும் “சூப்பர் வீக்” என்று இரண்டு ப்ளான்களை அறிமுகம் செய்தது.

வோடபோஃன் அதன் புதிய 4 ஜி வாடிக்கையாளர்களுக்காக புதிய ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த ஆஃபரில் ரூ.244-க்கு 70 ஜி.பி டேட்டா(நாள்தோறும் 1ஜி.பி) மற்றும் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி கால்கள் உள்ளிட்டவை 70 நாட்கள் வேலிடிட்டியில் வழங்கப்படுகிறது. புதிய வோடபோஃன் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த ஆஃபர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த ஆஃபரானது குறிப்பிட்ட பிராந்தியங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. முதல் ரீசார்ச்சின் போது 70 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும் நிலையில், இரண்டாவது முறையில் இந்த ஆஃபரில் ரீசார்ச் செய்யும் போது அதன் வேலிடிட்டி 35 நாட்களாக குறைக்கப்படும் என கூறப்படுகிறது. புதிய வோடபோஃன் வாடிக்கையாளர்களுள் செய்யும் முதல் ரீசார்ஜின் போது இந்த ஆஃபர் பொருந்தும் என்பது கவனிக்கத்தக்கது.

ஜியோவின் தன் தனா தன் ப்ளானிற்கு போட்டியாக இந்த ஆஃபரை வோடபோஃன் அறிமுகம் செய்துள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் அந்நிறுவனத்தின் சேர்மன் முகேஷ் அம்பானி கூறும்போது, 12.5 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோவில் இணைந்திருப்பதாக தெரிவித்தார் என்பது கவனிக்கத்தக்கது.

ஜியோ நிறுவனமானது தனது ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்காக புதிய “தன் தனா தன்” திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஜியோவின் இந்த புதிய திட்டத்தில் அதிக டேட்டாவுடன் அதிக வேலிடிட்டியும் வழங்கப்படுகிறது. ரூ.349 ரீசார்ஜில் 20 ஜி.பி 4ஜி டேட்டா 56 நாட்கள் வேலிடிட்டியில் உள்ளது. இதேபோல, ரூ.399-க்கு நாள்தோறும் 1 ஜி.பி டேட்டா என்ற விகிதத்தில் 84 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதேபோல, ஜியோவின் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கும் ரூ.349 மற்றும் ரூ.399-ல் ஆஃபர்கள் உள்ளன.

சமீபத்தில், ஜியோவிற்கு போட்டியாக வோடபோஃன் நிறுவனம் “சூப்பர் டே” மற்றும் “சூப்பர் வீக்” என்று இரண்டு ப்ளான்களை அறிமுகம் செய்தது. அதன்படி, 4ஜி வாடிக்கையாளர்கள் ரூ.19-க்கு ரீசார்ச் செய்து அன்லிமிடெட் வோடபோஃன் கால்கள் மற்றும் 100 எம்.பி ஆகியவற்றை ஒரு நாளுக்கு பெற முடியும்.

இதேபோல, ரூ.49-க்கு “சூப்பர் வீக்” ப்ளானில் 7 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதில் 250 எம்.பி டேட்டா வழங்கப்படுகிறது.

×Close
×Close