ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் அதிரடி ஆஃபரை அறிவித்துள்ள நிலையில், வோடபோன் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.399 விலையில் புதிய ஆஃபரை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி வோடபோன் நிறுவனம் இந்த ஆஃபரை வழங்குகிறது. அதன்படி ரூ.399 என்ற தொகையில் ரீசார்ச் செய்யும்போது, அன்லிமிடெட் லோக்கல்-எஸ்.டி.டி கால்ஸ் மற்றும் 90 ஜி.பி 4ஜி டேட்டா ஆகியவை 6 மாத வேலிடிட்டியில் வழங்கப்படுகிறது.
ஏர்டெல், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களும் ரூ.399 என்ற ப்ளானை அறிவித்திருந்தன. இதனை கருத்தில் கொண்டு பி.எஸ்.என்.எல் நிறுவனமும் அவ்வப்போது, புதிய ஆஃபர்களை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.399 பொறுத்தவரையில், ப்ரைம் வாடிக்கைளார்களுக்கு 84 ஜி.பி 4ஜிடேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் 84 நாட்கள் வேலிடிட்டியில் வழங்கப்படுகிறது. இந்த ப்ளான்படி நாள்தோறும் 1 ஜி.பி டேட்டா பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், எஸ்.எம்.எஸ்-ம் இலவசமாக வழங்கப்படுகிறது. மை ஜியோ, ஜியோ மியூசிக், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ எக்ஸ்ப்ரஸ் நியூஸ் உள்ளிட்ட பல்வேறு ரிலையன்ஸ் ஜியோ ஆப்ஸ்-களையும் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
ஏர்டெல் ரூ.399 ப்ளானை பொறுத்தவரையில், 4ஜி போன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நாள்தோறும் 1ஜி.பி 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. எனினும் இதன் வேலிடிட்டி 28 நாட்கள் என்பது கவனிக்கத்தக்கது. 4ஜி போன் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு ரூ.399 ப்ளானின் கீழ், நாள்தோறும் 1.25 ஜி.பி டேட்டா, அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி கால்ஸ் வழங்கப்படுகிறது.
இதனிடையே, அக்டோபர் 12-ம் தேதி முதல் அக்டோபர் 18-ம் தேதிக்குள்ளான கால கட்டத்தில் ரூ.399-க்கு ரீசார்ச் செய்யும் வாடிக்கையார்களுக்கு, 100 சதவீத கேஷ்பேக் வழங்கப்படும் என ஜியோ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.