Advertisment

முடிவுக்கு வந்த பீட்டிலின் உற்பத்தி... 81 ஆண்டு காலம் பீட்டில் கடந்த வந்த பாதை!

ஃவோக்ஸ்வேகனின் இந்த கடைசி எடிசனில் 5,961 கார்கள் தயாரிக்கப்பட்டன. இதன் விலை 20 ஆயிரம் டாலர்கள் ஆகும்.

author-image
Nithya Pandian
புதுப்பிக்கப்பட்டது
New Update
Volkswagen Beetle Final Edition SE SEL, The journey of VW Beetle from 1938

Volkswagen Beetle Final Edition SE SEL

Volkswagen Beetle Final Edition SE SEL : மெக்சிகோ நாட்டில் பியூப்லா நகரில் ஃபோக்ஸ்வேகனின் கடைசி பீட்டில் கார் உற்பத்தி செய்யப்பட்டு, ஜூலை 10ம் தேதி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போர் துவங்குவதற்கு முன்பாகவே, அனைத்து தரப்பு மக்களாலும் வாங்க கூடிய வகையில் ஒரு காரினை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளியிட்டார் ஹிட்லர்.

Advertisment

Volkswagen Beetle First designed car

அதனை அவர் “People's Car" என்று அழைத்தார். அது தான் இன்று நாம் அனைவராலும் அழைக்கப்படும் ஃபோக்ஸ்வேகன். ஜெர்மனியில் ஃபோக்ஸ்வேகன் என்றால் அதற்கு மக்களின் கார் என்று அர்த்தம். ஹிட்லரின் ஆசைக்கு ஏற்ற வகையில் ஃபெரினாண்ட் போர்ஷே என்ற பொறியியலாளர் இந்த காரினை 1938ம் ஆண்டு தயாரித்து வெளியிட்டார்.

publive-image 1939ல் உருவாக்கப்பட்ட பின்பக்க இருக்கைகளை கொண்ட கன்வெர்ட்டிபிள் பீட்டில்

Volkswagen Beetle During WWII

வண்டு போன்று இருக்கும் இந்த அமைப்பை பார்த்து இதற்கு பீட்டில் என்று பெயரிட்டனர். இதனை மக்கள் பக் (Bug) என்றும் அழைப்பது உண்டு. இரண்டாம் உலகப்போர் துவங்கிய காலகட்டத்தில் இருந்து 1941 முதல் 44 வரையிலான கால கட்டத்தில் நாஜி படையினருக்காக இந்த கார்கள் தயாரிக்கப்பட்டு வந்தன.

Volkswagen Beetle Final Edition SE SEL - The journey of VW Beetle from 1938 1940ல் வெளியான பீட்டில்...

Volkswagen Beetle Post WWII

போரில் ரஷ்ய கூட்டணி வெற்றி பெற, இந்த அழகான காரின் வரலாற்றில் இருந்து நாஜியின் எண்ணங்களை பிரித்தெடுக்க, இங்கிலாந்து மீண்டும் இதன் உற்பத்தியை துவங்கியது. உலகின் பெரும்பாலான இடங்களில் போர் நடைபெற்றதால் உலகெங்கும் நல்லவிதமான பேரை பெற்றது இந்த கார். இந்த புகழை தக்கவைத்து கொண்டது பீட்டில்.

publive-image இரண்டாம் உலக போர் முடிந்த பிறகு 1945ல் மேற்கு ஜெர்மனியில் உருவாக்கப்பட்ட பீட்டில்

Volkswagen Beetle Love Bug

உலக அளவில் அதிக இடங்களில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட ஒரு கார் என்ற பெருமையை பீட்டில், 1968 ஆண்டில் வெளியான லவ் பக் “Love Bug" என்ற ஹாலிவுட் படத்தினால் மேலும் விற்பனையில் புதிய உட்சம் அடைந்தது. இது வரையில் 21 மில்லியன் கார்கள் உலகம் முழுவதும் விற்பனையாகியுள்ளது.

Volkswagen Beetle Final Edition SE SEL - The journey of VW Beetle from 1938 Love Bug படத்தில் பயன்படுத்தப்பட்ட மாடல் (1968)

Volkswagen Super Beetle (1971)

1971ம் ஆண்டு பீட்டிலுக்கு மிக முக்கியமான ஒரு வருடமாகும். ஏன் என்றால் அதிக ட்ரங்க் ஸ்பேஸ் கொண்ட சூப்பர் பீட்டில் என்ற கார் அப்போது தான் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதிக்குள் சுமார் 1 கோடிக்கும் மேலான கார்கள் புக் செய்யப்பட்டது. 40 வருடங்களாக ஃபோர்ட் T கார் பெற்ற பெஸ்ட் செல்லிங் என்ற பட்டத்தை ஒரே ஆண்டில் தட்டிச் சென்றது ஃவோக்ஸ்வேகன்.

Volkswagen Beetle Final Edition SE SEL - The journey of VW Beetle from 1938

Volkswagen Beetle Type 1 model (2003)

ஏர் கூல்ட் எஞ்சின் கொண்டு உருவாக்கப்பட்ட டைப் 1 பீட்டில் கார் 2003ம் ஆண்டு வரை உருவாக்கப்பட்டு வந்தது. அதே தொழிற்சாலையில் தான் மூன்றாம் தலைமுறை பீட்டில் கார் தன்னுடைய பயணத்தையே முடித்துக் கொண்டது.

Volkswagen Beetle Final Edition SE SEL - The journey of VW Beetle from 1938 2003ம் ஆண்டோடு உற்பத்தி நிறுத்தப்பட்ட டைப் 1 மாடல் பீட்டில்

1999ம் ஆண்டில் புது உருவம் பெற்று நியூ பீட்டில் என்ற பெயரில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யபட்டது. அந்த சூழலில் மட்டும் 80,000 யூனிட்டுகள் விற்று தீர்த்தன. தற்போது வெளியாகும் எஸ்.யூ.வி போன்ற கார்களுக்கு இணையாக விற்பனையில் முன்னணி பெற இயலாத காரணத்தால் பீட்டிலின் உற்பத்தியை நிறுத்த இருப்பதாக ஃபோக்ஸ்வேகன் அறிவித்திருந்தது.

மேலும் படிக்க : பெண்களுக்காகவே தயாரிக்கப்பட்ட புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள்

Volkswagen Beetle Final Edition SE SEL

ஃபோக்ஸ்வேகன் இந்த முடிவினை மிக ஆரம்பத்திலேயே எடுத்து விட்ட காரணத்தால் இந்த எடிசனுக்கு ஃபோக்ஸ்வேகன் பீட்டில் ஃபைனல் எடிசன் மாடல் என்று பெயரிட்டிருந்தது. மொத்தமாக 5,961 கார்கள் தயாரிக்கப்பட்டன. அதன் கடைசி கார் தான் ஜூலை 10ம் தேதி ஆலையில் இருந்து வெளியானது.  இந்த ஃபைனல் எடிசனில் இரண்டு வகையான கார்கள் வெளியானது ஒன்று Final Edition SE மற்றொன்று Final Edition SEL ஆகும்.  கடைசி பீட்டிலின் விலை 20 ஆயிரம் டாலர்களாகும். இந்திய விலையில் ரூ. 13 லட்சம் ஆகும்.

Volkswagen Beetle Final Edition SE SEL - The journey of VW Beetle from 1938

இறுதியாக வெளியான பீட்டில் சகாப்தத்தின் இறுதி கார்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment