மெட்டா நிறுவனம் ட்விட்டர் தளத்திற்கு போட்டியாக இன்ஸ்டாகிராம் த்ரெட்ஸ் என்ற செயலியை கடந்த 6-ம் தேதி அறிமுகப்படுத்தியது. அறிமுகம் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கான பயனர்களைப் பெற்று அமோக வரவேற்பு கிடைத்தது. இன்ஸ்டாகிராம் மூலமாக த்ரெட்ஸ் செயலி ஷைன்-அப் செய்யப்படுகிறது. இதனால் ஏராளமான பயனர்களை த்ரெட்ஸ் பெற்றது.
இந்தநிலையில், உங்க த்ரெட்ஸ் அக்கவுண்ட்டை டெலிட் செய்ய விரும்பினால். அதை செய்ய முடியாது. ங்கள் த்ரெட்ஸ் கணக்கை நீக்க மெட்டா அனுமதிக்காது. அவ்வாறு நீங்கள் அக்கவுண்ட் டெலிட் செய்ய விரும்பினால் உங்கள் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்வும் சேர்ந்து டெலிட் செய்யப்படும். இன்ஸ்டாகிராம் - த்ரெட்ஸ் க்ராஸ் நெட்வொர்க்கிங் முறையில் செயல்படுவதால் இவ்வாறு செய்யப்படுகிறது.
இருப்பினும் நீங்கள் த்ரெட்ஸ் அக்கவுண்ட்டை டிஆக்டிவேட் செய்யலாம். இது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை பாதிக்காது. டிஆக்டிவேட்(Deactivate) செய்தால் அது த்ரெட்ஸ் அக்கவுண்ட்டிற்கு மட்டுமே பொருந்தும். இது குறித்த விவரம் த்ரெட்ஸின் தனியுரிமைக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டி-ஆக்டிவேட் செய்வது எப்படி?
த்ரெட்ஸின் தனியுரிமைக் கொள்கையில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் வெகு சிலருக்கு மட்டுமே இது குறித்து தெரிந்துள்ளது. இந்த பிரச்சனை குறித்து இன்ஸ்டாகிராம் தலைமை நிர்வாக அதிகாரி ஆடம் மொசெரி கூறுகையில், த்ரெட்ஸ் அக்கவுண்ட் மட்டும் தனியாக டெலிட் செய்வதற்கான வழிகளை நாங்கள் கவனித்து வருகிறோம் என்றார்.
த்ரெட்ஸ் அக்கவுண்ட் டி-ஆக்டிவேட் செய்ய செட்டிங்ஸ் பக்கம் சென்று உங்கள் ப்ரொபைல் பக்கத்தை கிளிக் செய்து ஆக்கவுண்ட் ஆப்ஷனைக் கொடுத்து டி-ஆக்டிவேட் என்பதை செலக்ட் செய்யவும். மீண்டும் அக்கவுண்ட்டை பயன்படுத்த இதே போன்று செய்து ரீ-ஆக்டிவேட் செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“