scorecardresearch

இனி உங்க சாட் ரொம்ப சேஃப் : வாட்ஸ்அப் ‘சாட் லாக்’ அதிகாரப்பூர்வ அறிமுகம்; எப்படி பயன்படுத்துவது?

WhatsApp adds chat lock feature: வாட்ஸ்அப்பில் தனி நபர் சேட்களை லாக் செய்து கொள்ளும்படி ‘Chat Lock’ என்ற அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Whatsapp locked chats
Whatsapp locked chats

வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமானவர்கள் வாட்ஸ்அப் செயலி பயன்படுத்துகின்றனர். பயனர்களின் வசதிக்கு ஏற்ப வாட்ஸ்அப் புது புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக தனியுரிமை பாதுகாப்பு அம்சத்தை உறுதி செய்து வருகிறது.

அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப்பில் தனி நபர் சேட் பக்கத்தை லாக் செய்து கொள்ளும்படி ‘Chat Lock’ என்ற அம்சம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதன் மூலம் தனி நபர் சேட்-ஐ பாஸ்வேர்டு அல்லது பயோமெட்ரிக் கொண்டு லாக் செய்து கொள்ளலாம். மேலும் இந்த சேட்கள் தனி folder-ல் சேமிக்கப்படும், பெயர் மறைக்கப்படும்.

அதோடு மட்டுமல்லாமல் இந்த சேட்களில் இருந்து வரும் மெசேஜ்களுக்கான நோட்டிபிக்கேசன் ப்ரிவியூ செய்யப்படாது. இது பயனர் பாதுகாப்பை மேலும் உறுதி செய்கிறது. சேட் பக்கத்தை அன்-லாக் செய்தால் மட்டுமே மெசேஜ்களை படிக்க முடியும்.

வாட்ஸ்அப் எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷன், என்கிரிப்டேடு சேட் பேக்அப், Disappearing messages எனப் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ள நிலையில், ‘சேட் லாக்’ அம்சம் பயனர் பாதுகாப்பை மேலும் உறுதி செய்கிறது. ‘Chat Lock’ அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் பயனர்கள் இருவருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சேட் லாக் எப்படி பயன்படுத்துவது?

  1. முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஐ.ஓ.எஸ் போனை சமீபத்திய வாட்ஸ்அப் வெர்ஷனுக்கு அப்பேட் செய்யவும்.
  2. இப்போது வாட்ஸ்அப் பக்கம் வந்து எந்த சேட்-ஐ லாக் செய்ய வேண்டுமே அந்த சேட்-ஐ ஓபன் செய்யவும்.
  3. அந்த சேட்டின் profile picture-ஐ கிளிக் செய்யவும்.
  4. இப்போது Disappearing messages மெனுவிற்கு அருகில் “chat lock” என்ற புதிய ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும்.
  5. அதை Enable செய்து, போன் பாஸ்வேர்டு அல்லது பயோமெட்ரிக் உள்ளி்டவும். அவ்வளவு தான்.

Locked chats எப்படி பயன்படுத்துவது?

வாட்ஸ்அப் ஹோம் பக்கத்தை ஸ்பைப் டவுன் செய்தால் உங்கள் Locked chats கொடுக்கப்பட்டிருக்கும். அதை அன்-லாக் செய்து பயன்படுத்தலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Whatsapp adds chat lock feature to safeguard private conversations