வாட்ஸ்அப்-இல் விரைவில் 'கால் லிங்க்ஸ்' வசதி.. இந்த புது அப்டேட் என்ன? | Indian Express Tamil

வாட்ஸ்அப்-இல் விரைவில் ‘கால் லிங்க்ஸ்’ வசதி.. இந்த புது அப்டேட் என்ன?

ஆப்பிள் ஃபேஸ்டைம், Zoom, கூகுள் மீட் செயலிகள் போல் இனி வாட்ஸ்அப்பிலும் ‘கால் லிங்க்ஸ்’ (Call Links) உருவாக்கி அதை மற்றவர்களுடன் பகிர்ந்து ஆடியோ அல்லது வீடியோ கால் பேசலாம். அதேபோல் வீடியோ காலில் அதிகபட்சமாக 32 நபர்களுடன் பேசும் வகையில் புது அம்சம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வாட்ஸ்அப்-இல் விரைவில் ‘கால் லிங்க்ஸ்’ வசதி.. இந்த புது அப்டேட் என்ன?

வாட்ஸ்அப் செயலி உலக முழுவதும் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸ்அப் பிரபலமான செயலியாக உள்ளது. ஏராளமானோர் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துகின்றனர். பயனர்களின் வசதிக்கு ஏற்ப வாட்ஸ்அப் நிறுவனம் புது புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்தவகையில் தற்போது ‘கால் லிங்க்ஸ்’ (Call Links) வசதியை அறிமுகப்படுத்துவதாக கூறியுள்ளது. இந்த வசதி தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. மெட்டா சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் ‘கால் லிங்க்ஸ்’ என்ற புதிய அம்சம் சோதனையில் உள்ளது என்று அறிவித்தார். பெயர் கூறுவது போல, உங்கள் contacts-இல் உள்ளவர்களுக்கு வாட்ஸ்அப் ஆடியோ, வீடியோ கால்களுக்கு ஒரு லிங்க் உருவாக்கி அதை மற்றவர்களுடன் பகிர்ந்து உரையாடலாம்.

குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் ஆப்பிள் ஃபேஸ்டைம், Zoom, கூகுள் மீட் போல் வாட்ஸ்அப் செயலியிலும் இனி லிங்க உருவாக்கி அதை மற்றவர்களுடன் பகிர்ந்து பேசலாம். அதேபோல் வீடியோ காலில் அதிகபட்சமாக 32 நபர்களுடன் பேசும் வகையில் இந்த புது அம்சம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தற்போது வாட்ஸ்அப் வீடியோ காலில் 8 நபர்களுடன் மட்டுமே பேச முடியும்.

இந்த புது அம்சம் வாட்ஸ்அப்பில் கால்ஸ் (calls tab) பக்கத்தில் இடம்பெறும். கால் லிங்க் உருவாக்கி அதை மற்றவர்களுடன் பகிரலாம். அந்த லிங்க்கை கிளிக் செய்து (Zoom, கூகுள் மீட் போல்) மீட்டிங், கால் பேசலாம். இந்த வசதி தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Whatsapp adds support for sharing call links will support 32 users in video call