வாட்ஸ்அப்-ல் ஸ்டேட்டஸ் வைப்பதில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக பயனர்கள் வாட்ஸ்அப்- ஸ்டேட்டஸில் வண்ணமயமான டெக்ஸ்டை புகுத்திக் கொள்ள முடியும்.
வாட்ஸ்அப்-ல் கேமரா ஐகானுக்கு மேல் பகுதியில் புதிதாக பென்சில் பட்டன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலன் பயனர்கள் கலர்ஃபுல் ஆன டெக்ஸ்ட் ஸ்டேடஸை பதிவேற்றம் செய்ய முடியும். இதற்காக வாட்ஸ்அப், எமோஜியை சேர்ப்பது, ஃபான்ட் தேர்வு செய்தல், பேக்கிரவுண்ட் கலர் மாற்றுதல் போன்ற மூன்று விதமான ஆப்ஷனை வழங்குகிறது வாட்ஸ்அப்.
ஸ்டேடஸில் வண்ணமயமான டெக்ட்டை புகுத்துவதை பேஸ்புக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்தது. தற்போதைய நிலையில், பேஸ்புக் 10-க்கும் மேற்பட்ட நிறங்களை பேக்கிரவுண்டில் வைக்கும் வகையில் கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், அதேபோல வாட்ஸ்அப்-பிலும் ஸ்டேடஸில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்-ன் 2.17.291 என்ற பீட்டா வெர்ஷரின் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிக்னறன.
பேஸ்புக் தலைமையிலான, வாட்ஸ்அப்-பை 130 கோடி பயனர்கள் உள்ளனர் என்றும், அதில் தினந்தோறும் 25 கோடி பேர் ஸ்டேட்டஸ் வசதியை பயன்படுத்தி வருவதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.