Advertisment

அடுத்த அப்டேட்: புதிய இமோஜி கீபோர்டை அறிமுகம் செய்யும் வாட்ஸ்அப்; என்ன இது?

WhatsApp redesigned emoji keyboard: வாட்ஸ்அப் நிறுவனம் ரீ-டிசைன் செய்யப்பட்ட புதிய இமோஜி கீபோர்டை விரைவில் அறிமுகம் அறிமுகம் செய்ய உள்ளது.

author-image
WebDesk
New Update
WhatsApp (Express photo)

WhatsApp (Express photo)

மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் அடுத்தடுத்த அப்டேட்களை கொடுத்து பயனர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ரீ-டிசைன் செய்யப்பட்ட புதிய இமோஜி கீபோர்டை வெளியிடுவதாகக் கூறியுள்ளது. இந்த அப்டேட்டின் மூலம் பயனர்கள் கீபோர்டை ஸ்க்ரோல் செய்ய முடியும். வைய்டு ரேஞ் வியூ மூலம் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியும்.

Advertisment

இந்த அப்பேட் தற்போது பீட்டா பயனர்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. சோதனை முறையில் பீட்டா ஆண்ட்ராய்டு 2.23.12.19 அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய அப்பேட் பயனர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் என்றும் GIF, ஸ்டிக்கர் மற்றும் அவதார் ஸ்டிக்கர்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது. இந்த புதிய இமோஜி கீபோர்ட் சோதனை முடிவடைந்த நிலையில் விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் அறிமுகப்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Whatsapp Whatsapp Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment