Advertisment

வாட்ஸ்அப்-ல் “லைவ் லொகேஷன் ஷேரிங்” அறிமுகம்!

வாட்ஸ்அப் நிறுவனமானது “லைவ் லொகேஷன் ஷேரிங்” ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
WhatsApp, Live Location Sharing,

வாட்ஸ்அப் நிறுவனமானது “லைவ் லொகேஷன் ஷேரிங்” ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப்-ல் உள்ள மற்றவர்களுக்கோ அல்லது குரூப்-ல் உள்ளவர்களுக்கோ உங்களின் இருப்பிடத்தை லைவ்-ஆக தெரிவிக்க முடியும்.

Advertisment

2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் படி வாட்ஸ்அப்- நிறுவனமானது இந்தியாவில் 200 மில்லியன் ஆக்டிவ் யூசர்களை கொண்டிருப்பதாக தெரிவித்தது.

பயனர்களை ஈர்க்கும் வகையில் வாட்ஸ்அப் புதுப்புது தொழில்நுட்பத்தில், அதிக ஆப்ஷன்களை வழங்கி வருகிறது. முன்னதாக, புகைபட ஸ்டேட்டஸ் அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப் , பின்னர் பேஸ்புக் போன்று டெஸ்ட் ஸ்டேடஸ் ஆப்ஷனையும் வழங்கியது. தற்போது மேலும் புதியதாக“லைப் லொகேஷன் ஷேரிங்” ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப்-ல் உள்ள மற்றொரு நபரே அலலது குரூப்பில் உள்ளவர்களையோ உங்களின் இருப்பிடத்தை லைவ்-ஆக அறிந்து கொள்ள முடியும். இதேபோல, லைவ் லொகேஷன் ஷேரிங் ஆப்ஷனை, நினைக்கும்போது ஸ்டாப் செய்யவும் முடியும்.

முன்னதாக ஸ்னாப்சாட் கடந்த ஜூன் மாதம் லொகேஷன் ஷேரிங் ஆப்ஷனை, ஸ்னாப் மேப் என்ற பெயரில் அறிமுகம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Whatsapp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment