Advertisment

கேப் புக்கிங், மளிகை பொருட்கள் ஆர்டர்: வாட்ஸ்அப்-ல் இனி அனைத்தும் செய்யலாம்; அசத்தல் வசதி அறிமுகம்

வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்புவதற்கு மட்டும் என்று நினைக்கிறீர்களா? ஆனால் அதுதான் இல்லை. இந்த ஆப் மூலம் மளிகை பொருட்கள் ஆர்டர் செய்யலாம், உபர் கார் புக்கிங் செய்யலாம்

author-image
sangavi ramasamy
New Update
Jio whatsapp.jpg

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. வாட்ஸ்அப் மெசேஜிங்கிற்கு மட்டும் இன்றி பணம் அனுப்புவது, பொருட்கள் ஆர்டர் செய்வது,  கார் புக்கிங் செய்வது எனப் பல்வேறு மேம்பட்ட வசதிகளை அறிமுகம் செய்துள்ளது.  அதுகுறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

கார் புக்கிங் 

வாட்ஸ்அப் மூலம் உபர் கார் பதிவு செய்யலாம். உபர் செயலி டவுன்லோடு செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை.   வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாக உபர் கார் புக்கிங் சேவையைப் பெறலாம். இதற்கு, 

  1. உங்கள் போனில் 7292000002 என்ற எண்ணை Save செய்யவும். 

    2. இப்போது வாட்ஸ்அப் பக்கம் சென்று இந்த எண்ணிற்கு “ஹாய்” என மெசேஜ் அனுப்பவும். 

    3.  அடுத்து உங்கள் பிக்அப் இடம் மற்றும் சேரும் இடத்தை தெரிவிக்கவும். 

    4. இப்போது இதற்கான கட்டணம் மற்றும் டிரைவர் விவரங்கள் கொடுக்கப்படும்.  

whatsapp uber

 

மெட்ரோ டிக்கெட் 

அடுத்து வாட்ஸ்அப் மூலம் சுலபமாக மெட்ரோ ரயில் டிக்கெட் புக் செய்யலாம். இதன் மூலம் வரிசையில் நின்று டிக்கெட் எடுப்பதற்கான நேரம், சில்லறை பெறுவது உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை தவிர்க்கலாம். ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கலாம். டெல்லியில் இது முன்பே அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், சென்னையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

ஜியோ மார்ட் 

வாட்ஸ்அப்-ல் JioMart  மூலம் மளிகைப் பொருட்களை வாங்கலாம்.  ஜியோ மார்ட் வாட்ஸ்அப் ஆர்டருக்கு 30% ரூ.120 வரை தள்ளுபடி வழங்குகிறது.  வாட்ஸ்அப்-ல் மளிகை பொருட்கள் எப்படி ஆர்டர் செய்வது. 

  1. JioMart எண் +91 79770 79770 உங்கள் போனில் பதிவு செய்யவும். 

    2.  உரையாடலைத் தொடங்க "ஹாய்" என்று செய்தி அனுப்பவும். 

    3.  இப்போது நீங்கள் அதில் கொடுக்கப்படும்  பொருட்ளை அல்லது உங்கள் தேவையான பொருட்களை தேடலாம்.

    4. உங்களுக்கு தேவையான பொருட்களை Cart-ல் Add செய்யவும்.

    5.  இப்போது Proceed to checkout கொடுத்து வாட்ஸ்அப் பே UPI மூலம் பணம் செலுத்தலாம்.  jiomart

சுகாதார சேவை 

இந்தியாவின் கிராமப் புறங்களில் பொது சுகாதார அணுகல் ஒரு சவாலாக உள்ளது. இதைத் தீர்க்க உதவும் 

வகையில், வாட்ஸ்அப் மூலம் CSC ஹெல்த் சர்வீசஸ் ஹெல்ப் டெஸ்க் தொடங்கப்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான பயனர்களுக்கு டெலிஹெல்த் ஆலோசனைகள், அரசாங்க சுகாதாரத் திட்டங்கள் மற்றும் பல சேவைகள் வழங்கப்படுகிறது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது இங்கே:



  1. 1. உரையாடலைத் தொடங்க, +917290055552 என்ற எண்ணிற்கு  “ஹாய்” என மெசேஜ் செய்யவும். 

    2. உங்களுக்கு என்ன சேவைகள் தேவை என்பதை மெனுவிலிருந்து தேர்வு செய்யவும். 

    3. அடுத்து அதில் வரும் விவரங்களை கொடுத்து மருத்துவரின் ஆலோசனைகளைப் பெறலாம்.

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/technology/tech-news-technology/whatsapp-uses-besides-chatting-india-metro-tickets-digilocker-9042355/

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

 

Whatsapp Whatsapp Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment