/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-logo.jpg)
வாட்ஸ் அப்பில் உங்கள் கால், சேட், ஸ்டேட்டஸ் என அனைத்திலும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டது என குறிப்பு காட்டும்படி அப்டேட் செய்யப்பட உள்ளது.
வாட்ஸ் அப் ஏராளமானவர்கள் பயன்படுத்தும் மெசேஜிங் ஆப் ஆகும். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பயன்படுத்துகின்றனர். ஆடியோ காலிங், வீடியோ கால், தனி நபர் சேட், குரூப் சேட் எனப் பல அம்சங்கள் உள்ளன. தகவல் அனுப்புவதற்கு எளிதாக இருப்பதால் பலரும் இதை பயன்படுத்துகின்றனர். வாட்ஸ் அப் நிறுவனமும் பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பிலும் கவனம் செலுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது, பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளிலும் 'எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டது' ( end-to-end encrypted) என குறிப்பு காட்டும்படி அப்டேட் செய்யப்பட உள்ளது.
பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க, பாதுகாப்பான தகவல்தொடர்பு தளத்தை வழங்கும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் 2016-ம் ஆண்டு முதல் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் வசதியை வழங்குகிறது. என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் வசதி என்பது உங்கள் தகவல்கள் (சேட், போட்டோ, வீடியோ) என எதுவாக இருந்தாலும் வாட்ஸ்அப் தளத்தில் பாதுகாப்பாக இருக்கும். அதை நிறுவனம் கூட படிக்க முடியாது என்பது ஆகும்.
இந்த வசதி செயல்பாட்டில் இருந்தாலும் அதை பயனர்களுக்கும் தெரிவிக்கும்படி வாட்ஸ் அப் காலிங், சேட், ஸ்டேட்டஸ் என எல்லா பக்கங்களிலும் இது குறிப்பிட்டு காட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதி தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆண்ட்ராய்டு, ஐபோன் என இரண்டு பயனர்களும் இந்த வசதி வழங்கப்படுகிறது. வாட்ஸ் அப்பின் இந்த புதிய அம்சம் விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும அறிமுகப்படுத்தப் பட உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.