மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. இந்தியா உள்பட பல நாடுகளில் வாட்ஸ்அப் செயல்படுகிறது. வாட்ஸ்அப் இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப் ஆகும். பயனர்களின் வசதிக்கு ஏற்ப நிறுவனம் புது புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது ஃபார்வேர்டு மீடியா வித் கேப்ஷன் (Forward media with caption) என்ற அம்சம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
அதாவது, போட்டோ, வீடியோ சேர் செய்யும் போது மற்றவர்களுக்கு அனுப்பிய கேப்ஷனோடு அப்படியே சேர் செய்யலாம். இந்த வசதி தற்போது அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. முதலில் கடந்த மாதம் ஆப்பிள் பயனர்களுக்கு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. போட்டோ, வீடியோ, documents, GIFs என அனைத்தும் கேப்ஷனோடு சேர் செய்யலாம்.
அதேபோல் கேப்ஷன் வேண்டாம் என்றால் அதை ரிமூவ் செய்து கொள்ளலாம். (எ.கா) ஒருவருக்கு படம் அனுப்பி அதன் கீழ் காலை வணக்கம் என்று அனுப்பிகிறீர்கள். அதையே மற்றவருக்கும் அனுப்ப வேண்டும் என்றால் படத்தோடு அந்த கேப்ஷனும் தற்போது வந்துள்ள அப்டேட் மூலம் சேர் செய்து கொள்ளலாம். அந்த கேப்ஷன் வேண்டாம் என்றாலும் நீக்கி கொள்ளாலாம்.
அவ்வாறு கேப்ஷனோடு போட்டோ சேர் செய்யும் போது ஸ்கிரினுக்கு கீழ் ஒரு pops up ஆப்ஷன் காண்பிக்கும். அதில் கேப்ஷன் இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்று கேட்கும் அதை செலக்ட் செய்து சேர் செய்யலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/