WhatsappChannels feature: மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் பல்வேறு பயனர்களைக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.
அந்தவகையில் தற்போது புதிதாக சேனல் வசதி அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் தளங்களில் நீங்கள் எப்படி உங்களுக்கு விருப்பமான கிரிக்கெட் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், தலைவர்களை பின் தொடர்கிறீர்களோ அதேபோல் இனி வாட்ஸ்அப்பிலும் பின் தொடரலாம். வாட்ஸ்அப் சேனல் வசதி மூலம் இதை செய்யலாம்.
பிரபலங்கள் பற்றின அப்டேட்ஸ்களை இதில் தெரிந்து கொள்ளலாம். Updates என்ற புதிய டேப்-ல் இந்த விவரங்களைப் பெறலாம். இது one-way broadcast tool ஆகும்.
இந்த வாட்ஸ்அப் சேனல் வசதியில் ஏற்கனவே பிரபலங்கள் சிலர் இணைந்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியும் இணைந்துள்ளது. கத்ரீனா கைஃப், தில்ஜித் தோசன்ஜ், அக்ஷய் குமார், விஜய் தேவரகொண்டா, நேஹா கக்கர் மற்றும் பலர் இந்த வசதியில் இணைந்துள்ளனர். மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க்-யும் இப்போது நீங்கள் பின் தொடரலாம். பேஸ்புக், வாட்ஸ்அப் பற்றிய அப்டேட்களை இதில் பகிர்ந்து கொள்வார்.
வாட்ஸ்அப் சேனல் எப்படி பயன்படுத்துவது?
- முதலில் உங்கள் வாட்ஸ்அப்பை சமீபத்திய வெர்ஷனுக்கு அப்டேட் செய்யவும்.
2. இப்போது வாட்ஸ்அப் ஓபன் செய்து Updates tab பக்கம் சென்றால் முதலில் ஸ்டேட்டஸ் அம்சம் இருக்கும். அதன் கீழே சேனல் அம்சம் இருக்கும். அதில் நிறைய சேனல்கள் இருக்கும்.
3. உங்களுக்குப் பிடித்தமான பிரபலங்களின் சேனல்களை ‘+’ பட்டனை கிளிக் செய்து ஃபாலோ செய்யலாம்.
4. இந்த சேனல் அம்சத்தில் நீங்கள் பிரபலங்களுடன் ஷேட் செய்ய முடியாது, போஸ்ட் ரியாக்சன் ( Reaction) அனுப்பலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“