மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. இந்தியா உள்பட பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸ்அப் பயனர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது ‘அவதார் ‘ அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
அவதார் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் போன்ற டிஜிட்டல் அம்சமாகும். அதை நீங்களே உருவாக்கலாம். ஆண், பெண் ஸ்டிக்கர்கள் அதற்கு தேவையான ஆடைகள், சிகை அலங்காரங்கள், முகம் என பொருத்தி உருவாக்கலாம். இந்த அவதார் அம்சம் மெட்டாவின் மெசஞ்சர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலியில் ஏற்கனவே உள்ளன. இந்நிலையில் தற்போது
வாட்ஸ்அப்பில் அறிமுகமாக உள்ளன. இந்த அம்சத்தை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களிலும் பயன்படுத்தலாம்.
வாட்ஸ்அப்பில் அவதார் எவ்வாறு பயன்படுத்துவது?
முதலில் வாட்ஸ்அப்பிற்கு சென்று அங்கு ஸ்டிக்கர் பக்கத்திற்கு செல்லவும். வாட்ஸ்அப் சாட்டிற்கு கீழே உள்ள இமோஜி ஆப்ஷனுக்கு சென்றால் அதன் பக்கத்தில் ஸ்டிக்கர் ஆப்ஷன் இருக்கும்.
இப்போது உங்கள் போனில் அவதார் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து உங்களுடைய அவதாரை உருவாக்கலாம். இப்போது புது பக்கம் ஒன்று ஓபன் ஆகும். அதில் ‘Get Started’ என செலக்ட் செய்து அவதார் உருவாக்க தொடங்கலாம்.

அதில், முதலில் உங்கள் அவதாருக்கு வேண்டிய சரும நிறத்தை தேர்வுசெய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து ஹேர் ஸ்டைல், முகம், கண்கள் போன்றவற்றை தேர்வு செய்யலாம். விருப்பம் போல் அவதார் உருவாக்கிய பின் வலப்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள ‘Done’ என்ற ஆப்ஷனை கொடுத்து save செய்யவும். அவ்வளவு தான் சில நொடிகளில் உங்கள் அவதார் ஸ்டிக்கர் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். அதை நீங்கள் மற்றவர்களுக்கு அனுப்பலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/