மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் பல்வேறு பயனர்களைக் கொண்டுள்ளது. வாட்ஸ்அப் இன்ஸ்டண்ட் மெசேஜிங் ஆப் ஆகும். பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில் தற்போது 'Kept Messages' அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம் குறிப்பாக Disappearing message அம்சம் பயன்படுத்துபவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
Disappearing message என்பது குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்த மெசேஜ்கள் தானாகவே மறைந்து விடும். நாம் செலக்ட் செய்திருக்கும் நேரம் (எ.கா) 24 மணி நேரம், 1 வாரம், 1 மாதம் என வாட்ஸ்அப்பில் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும், இதில் 24 நேரம் மட்டும் மெசேஜ் இருக்க வேண்டும் என்று குரூப் சேட்டில் செலக்ட் செய்து வைத்திருந்தோம் என்றால் அதன் பின்னர் கடந்த 24 மணி நேர மெசேஜ்கள் தானாகவே டெலிட் ஆகி விடும். அந்த வகையில் Disappearing message என்ற ஆப்ஷன் கொடுத்திருந்தாலும், இந்த Kept Messages வசதி அந்த மெசேஜை ஷேவ் செய்து வைத்திருந்தால் அந்த மெசேஜ் டெலிட் ஆகாமல் எப்போதும், எல்லோரும் தெரியும் படி இருக்கும். இந்த வசதியை குரூப் சேட்டில் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
எவ்வாறு பயன்படுத்துவது?
வாட்ஸ்அப் சென்று குரூப் சேட் ( group chat) பக்கம் செல்ல வேண்டும். அங்கு குரூப் பெயர் (group name) உள்ள பக்கத்திற்கு செல்லவும். இப்போது அங்கு ‘Kept Messages’ என்ற அம்சம் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் நீங்கள் இந்த குரூப்பில் ஷேவ் (save) செய்து வைத்துள்ள மெசேஜ்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதாவது Disappearing message கொடுத்திருந்தாலும் save செய்யப்பட்டிருக்கும்.
இந்த அம்சம் தற்போது பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. WhatsApp Business (v2.23.4.10) இல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சோதனைக்குப் பின் விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/