கோடிக்கணக்கான பயனாளர்களை தன்னகத்தே கொண்டுள்ள வாட்ஸ் ஆப், 3-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பிற்பகல் சுமார் 1:30 மணிக்கு இந்தியா உட்பட உலக நாடுகள் முழுவதிலும் முடங்கியது. இதையடுத்து, அந்நிறுவனம் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்த பிறகு, சுமார் ஒரு மணிநேரத்திற்கு பின் மீண்டும் செயல்பட துவங்கியது.
சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான வாட்ஸ் ஆப், வெள்ளிக்கிழமை மதியம் சுமார் ஒன்றரை மணியளவில் முடங்கியது. முதலில், தமிழகத்தில் மழை பாதிப்புகள் காரணமாக முடங்கியிருக்கலாம் என நினைத்த நிலையில், இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவற்றிலும் தொழில்நுட்ப கோளாறால் வாட்ஸ் ஆப் முடங்கியது. மலேசியா, ஸ்பெயின், ஜெர்மனி, பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் வாட்ஸ் ஆப் முடங்கியது
46 சதவீதம் பேருக்கு இணைப்பிலும், 41 சதவீதம் பேருக்கு செய்திகள் அனுப்புதல் மற்றும் பெறுவதிலும், 12 ச்தவீதம் பேருக்கு ‘last seen' சிறப்பு வசதியிலும் பிரச்சனைகள் ஏற்பட்டன.
இந்நிலையில், வாட்ஸ் ஆப் பயனாளர்கள், #whatsappDown என்ற ஹேஷ்டேகை ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் உருவாக்கி புகார் தெரிவித்தனர். இந்த ஹேஷ்டேக், சில நிமிடங்களிலேயே ட்ரெண்ட் ஆனது.
இதையடுத்து, சுமார் ஒரு மணிநேரத்தில் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட பின் வாட்ஸ் ஆப் இடையூறுகள் இல்லாமல் செயல்பட துவங்கியது. அதன்பின்பே, வாட்ஸ் ஆப் பயனாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.