வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஒரு இன்ஸ்டன்ட் மெசேஜிங் செயலியாகும். வாட்ஸ்அப் சமீப காலமாக ஏராளமான அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அறிமுகம் செய்த வாட்ஸ்அப் இன்ஸ்டண்ட் வீடியோ மெசேஜ் (Instant Video Messages' feature) அம்சத்தில் புதிய மாற்றத்தை கொண்டு வர உள்ளது.
ஆடியோ மெசேஜ் எவ்வாறு அனுப்பபடுகிறதோ அவ்வாறே வீடியோ மெசேஜியும் வாட்ஸ்அப் அறிமுகம் செய்யப்பட்டது. ஆடியோ மெசேஜ் பட்டனை லாங் பிரஸ் செய்தால் வீடியோ மெசேஜ்-கான ஆப்ஷன் வரும். இந்நிலையில் வீடியோ மெசேஜ் ஆப்ஷனை டிஸ்ஏபிள் செய்து கொள்ள வாட்ஸ்அப் அனுமதி வழங்குகிறது.
ஆடியோ, வீடியோ மெசேஜ் இரண்டிற்கும் ஒரே பட்டன் என்பதால் இது பல பயனர்களுக்கு சிரமம் ஏற்பட்டதாக புகார் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த ஆப்ஷனை Disable செய்து கொள்ளும் வகையில் ஆப்ஷன் வழங்குகிறது.
எனினும் இதை நீங்கள் Disable செய்தாலும் மற்றவர்கள் அனுப்பும் வீடியோ மெசேஜை நீங்கள் பார்க்க முடியும்.
எவ்வாறு இதை செய்வது?
முதலில் வாட்ஸ்அப் சென்று வலப் புறத்தில் உள்ள மூன்று புள்ளி பட்டனைக் கிளிக் செய்யவும்.
அடுத்து செட்டிங்ஸ் ‘Chats’ செக்ஷன் செல்லவும்.
இப்போது Instant Video Messages என்ற ஆப்ஷன் இருக்கும். அதை Disable செய்யவும். அவ்வளவு தான்.
எனினும் Instant Video Messages அம்சம் இன்னும் பலருக்கு கிடைக்கவில்லை. விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும். அப்போது தேவை என்றால் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம்.
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“