டெலிகிராம் போன்று வாட்ஸ்அப்பிலும் வருகிறது அந்த அம்சம்; இப்படி பயன்படுத்தலாம்
Pin Message Feature:டெலிகிராம் ஆப்பில் உள்ளது போன்ற பின் மெசேஜ் அம்சம் விரைவில் வாட்ஸ்அப்பிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது ஏற்கனவே உள்ள பின் மெசேஜ் அம்சம் போன்றது அல்ல.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது பின் மெசேஜ் அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது ஏற்கனவே உள்ள பின் மெசேஜ் அம்சம் போன்றது அல்ல. டெலிகிராம் ஆப்பில் உள்ளது போன்று குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த ஷேட்-டை பின் செய்யும் அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
Advertisment
WABetaInfo படி, குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த ஷேட் மெசேஜை பின் செய்தால் பின்னர் அந்த நேரம் முடிந்தபின் தானாகவே அந்த ஷேட் அன்பின் (Unpin) ஆகிவிடும். தற்போது, பயனர்கள் 24 மணிநேரம், 7 நாட்கள் அல்லது 30 நாட்கள் வரை ஒரு குறிப்பிட்ட ஷேட்டை பின் செய்து வைக்கலாம். இந்த அம்சம் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. பீட்டா பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது உள்ள பின் மெசேஜ் அம்சம் ஒரு ஷேட் அல்லது குரூப்பை பின் செய்து வைத்தால் அது எவ்வளவு நாட்கள் ஆனாலும் பின் செய்யப்பட்டு முதல் ஷேட்டாகவே இருக்கும். நாம் தான் அதை அன்பின் செய்ய வேண்டும். ஆனால் இந்த அம்சம் எவ்வளவு நேரம் பின் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிடலாம். அந்த நேரம் கடந்த பின் தானாகவே அன்பின் ஆகிவிடும்.
தற்போது சோதனை செய்யப்பட்டு வரும் இந்த அம்சம் விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“