2 வாட்ஸ்அப் கணக்குகள் இப்போது ஒரே போனில்: எப்படி பயன்படுத்துவது?
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை இப்போது ஒரே போனில் பயன்படுத்தலாம். அலுவலக பயன்பாடு மற்றும் பர்ஸ்னல் வாட்ஸ்அப் கணக்களை ஒரே போனில் இணைத்து பயன்படுத்தலாம்.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் வேறு வேறு வாட்ஸ்அப் கணக்குகளை ஒரே போனில் இணைத்து பயன்படுத்தும் படி புதிய அம்சம் கொண்டு வரப்படும் என மெட்டா கூறியிருந்தது. அந்த வகையில் தற்போது அந்த அம்சம் அறிமுகம் ஆகியுள்ளது.
Advertisment
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை ஒரே போனில் பயன்படுத்தலாம். அலுவலக பயன்பாடு மற்றும் பர்ஸ்னல் வாட்ஸ்அப் கணக்களை ஒரே போனில் இணைத்து பயன்படுத்தலாம். இது பயனர்களின் நேரத்தை சேமிக்கவும், வேறு வேறு கணக்குகளுக்கு ஒவ்வொரு முறையும் log out and log in செய்யும் பிரச்சனைகளுக்க தீர்வாகவும் உள்ளது.
எப்படி பயன்படுத்துவது?
இந்த அம்சம் பயன்படுத்த 2 போன் நம்பர் அல்லது சிம் கார்டு வைத்திருக்க வேண்டும். அதோடு டூயல் சிம் சப்போர்ட் போன் வைத்திருக்க வேண்டும். இதை செய்வது மிகவும் ஈஸி.
முதலில் உங்கள் போனில் வாட்ஸ்அப் சென்று செட்டிங்ஸ் ஓபன் செய்யவும். 2. இப்போது உங்கள் பெயரின் பக்கத்தில் உள்ள small arrow-வை கிளிக் செய்யவும். “Add account” கொடுக்கவும். 3. உங்களின் மற்றொரு வாட்ஸ்அப் கணக்கின் மொபைல் எண்ணை டைப் செய்யவும். இப்போது அந்த எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் மூலம் code அனுப்பபட்டிருக்கும். அதை டைப் செய்து வெரிவை செய்யவும். 4. அவ்வளவு தான் இப்போது உங்கள் 2-வது வாட்ஸ்அப் கணக்கு Add ஆகிவிடும். தேவையின்போது செட்டிங்ஸ் பக்கம் சென்று பெயருக்கு அருகில் உள்ள arrow-வை கிளிக் செய்து கணக்கை மாற்றி பயன்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“