மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. இன்ஸ்டண்ட் செசேஜிங் ஆப்-ஆன வாட்ஸ்அப் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்துகின்றனர். பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட எடிட் அம்சம் வாட்ஸ்அப் வைப் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கணினி, லேப்டாப்-ல் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்கு முதற்கட்டமாக எடிட் மெசேஜ் அம்சம் அறிமுகம் செய்யப்படுகிறது.
இருப்பினும் இந்த அம்சம் சோதனை அடிப்படையில் பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும். வாட்ஸ்அப்-ல் எழுதுப் பிழையாக ஏதாவது மெசேஜ் அனுப்பினால் அதை முற்றிலுமாக டெலிட் செய்து விட்டு பின்பு மீண்டும் அனுப்ப வேண்டும். அந்த வகையில் எடிட் அம்சம் மூலம் பிழைகளை திருத்தி அப்படியே அனுப்பலாம். இது பெரிதும் உதவியாக இருக்கும்.
வாட்ஸ்அப் வைப் தொடர்ந்து, ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் பயனர்களுக்கும் விரைவில் எடிட் அம்சம் அறிமுகப்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
எடிட் அம்சம் எவ்வாறு பயன்படுத்துவது?
- வாட்ஸ்அப் சேட்-ல் எந்த மெசேஜை எடிட் செய்ய வேண்டுமோ அதை செலக்ட் செய்யவும்.
- இப்போது அந்த மெசேஜை Tap செய்து hold செய்யவும்.
- அடுத்து வரும் மெனுவில் இருந்து எடிட் ஆப்ஷன் தேர்ந்தெடுக்கவும்.
- பிழைகளை திருத்தி "Done" பட்டனை கொடுக்கவும்.
- அவ்வளவு தான் இப்போது உங்கள் மெசேஜ் எடிட் செய்யப்பட்டது என்று காண்பிக்கப்படும்.
இந்த எடிட் அம்சத்தை நீங்கள் மெசேஜ் செய்ய 15 நிமிடங்களில் பயன்படுத்த வேண்டும். தனி நபர் சேட், குரூட் சேட்டில் பயன்படுத்தலாம். எவ்வளவு முறை வேண்டுமானாலும் மெசேஜ் எடிட் செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“