மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. இந்தியா உள்பட பல நாடுகளில் வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது. தகவல்கள், போட்டோஸ், வீடியோயோஸ் அனுப்புவதற்கு மிக எளிதாக இருப்பதால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்துகின்றனர். நிறுவனமும் பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், உயர் தர படங்கள் (high resolution images) சேர் செய்யும் வகையில் புது அப்டேட் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வாட்ஸ்அப் மூலம் யாருக்காவது போட்டோஸ், வீடியோயோஸ் அனுப்புகிறோம் என்றால் அது compress ஆக குறைந்த தரத்தில் அனுப்படுகிறது. நாம் போட்டோ எடுத்த போது இருந்த தரத்தில் அனுப்ப முடியாது. டேட்டா மற்றும் ஸ்டோரேஜ் குறைப்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. நாம் வாட்ஸ்அப் ‘Document’ ஆப்ஷன் பயன்படுத்தி போட்டோஸ் அனுப்பி வருகிறோம். இந்நிலையில் புது அப்டேட் மூலம் நேரடியாக high resolution போட்டோஸ் compress இல்லாமல் அனுப்ப முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.
புது அப்டேட்டில் ‘settings’ icon பயன்படுத்தி high resolution போட்டோஸ் அனுப்பும் படி வரவுள்ளது.
‘settings’ ஐகான் செலக்ட் செய்து original quality போட்டோகளை அனுப்பலாம். இனி ‘Document’ ஆப்ஷன் பயன்படுத்தி போட்டோஸ் அனுப்ப தேவையில்லை. இந்த அப்டேட் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. பீட்டா வெர்ஷனில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்ப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/