வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டண்ட் மெசேஜிங் செயலி பயனர்களின் வசதிக்கு ஏற்ப அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக சமீப நாட்களாக வாரம் ஒரு அப்டேட்களை நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
அந்த வரிசையில் தற்போது ஸ்னாப்சாட்டில் உள்ள வீடியோ மெசேஜ் அம்சம் போன்று வாட்ஸ்அப்பிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் பீட்டா வெர்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பீட்டா பயனர்கள் இதை பயன்படுத்தலாம்.
வாட்ஸ்அப் டெக்ஸ்ட், வாய்ஸ் மெசேஜ் போன்று வீடியோ மெசேஜ் வசதியையும் எளிதாக பயன்படுத்தலாம்.
எப்படி பயன்படுத்துவது?
வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது போன்று பயனர்கள் சேட் பக்கம் சென்று புது வசதியைப் பயன்படுத்த வலது பக்கத்தில் இருக்கும் மைக்ரோஃபோன் பட்டனை கிளிக் செய்யவும். நீங்கள் பீட்டா வெர்ஷன் பயன்படுத்தும் போது மைக்ரோஃபோன் பட்டன் வீடியோ பட்டனாக மாற்ற ஆப்ஷன் கேட்கும். இதைப் பயன்படுத்தி வீடியோ மெசேஜ் ரெக்கார்டு செய்யவும். அதிகபட்சமாக 60 நொடிகள் (1 நிமிடம்) வரை வீடியோ மெசேஜ் அனுப்பலாம்.
பயனர் பாதுகாப்பை உறுதிப்படுத்த டெக்ஸ்ட், வாய்ஸ் மெசேஜ் போன்று வீடியோ மெசேஜ் வசதியும் எண்ட் டூ எண்ட் என்கிரிப்ட் செய்யப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“