மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது க்யூ ஆர் ஸ்கேன் மூலம் Chat History டிரான்ஸ்வர் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப் பட உள்ளது. முன்னதாக, உங்கள் பழைய ஆண்ட்ராய்டு போனில் உள்ள வாட்ஸ்அப் Chat History-யை புதிய போனிற்கு மாற்று முதலில் பழைய போனில் உங்கள் Chat History-யை கூகுள் டிரைவ் மூலம் பேக்அப் எடுத்து பின் அதை புது போனிற்கு சிங்க் செய்ய வேண்டும். இதற்கு பல மணி நேரம் ஆகும். அந்த வகையில் தற்போது அறிமுகப்படுத்தப் பட உள்ள க்யூ ஆர் ஸ்கேன் வசதி நிமிஷத்தில் Chat-டை பேக்அப் செய்து டிரான்ஸ்வர் செய்து விடும்.
எனினும் இந்த அம்சம் தற்போது பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் தற்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்கள் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும்.
இது எவ்வாறு செயல்படும்?
இந்த அம்சம் அனைவரது பயன்பாட்டிற்கும் வந்த பின் பழைய ஆண்ட்ராய்டு போனில் இருந்து புதிய போனிற்கு க்யூ ஆர் ஸ்கேன் மூலம்
Chat History டிரான்ஸ்வர் செய்யலாம். அதற்கு செட்டிங்க்ஸ்> Chats பக்கம் செல்ல வேண்டும்.
பின்னர் க்யூ ஆர் ஸ்கேன் செய்ய வேண்டும். இப்போது உங்கள் மீடியா History உள்பட chat history மற்றும் டேட்டா என அனைத்தும் பேக் அப் எடுக்கப்பட்டு விரைவில் டிரான்ஸ்வர் செய்யப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“